பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துக்ைகமும் 鲁箕

'அ' என்பவரும் ஆ என்பவரும் ஒத்துப் போகிறார்கள் என்பதனால் அ என்பவரும், இ’ என்பவரும் ஒத்துப் போவர் என்பதில்லை. ஒத்துப் போதல் என்பது இருவரிடையே ஏற்படும் ஒர் உறவுமுறை. இஃது ஆளுமைகள் இடைவினை இயற்றுவதைப் பொறுத்தது. இவ்வுலகில் நடைபெறும் மகிழ் வான திருமணங்களையும் மகிழ்வற்ற திருமணங்களையும் ஆராய்ந்து எந்தப் பண்புக்கூறுகள் மகிழ்ச்சிக்கு அல்லது மகிழ்ச்சியின்மைக்குக் காரணம் என்பதை அறிய முனைந் தால், ஒரு முடிவிற்கும் வரமுடியாது. பல்வேறு விதமான மக்கள் மகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியில்லாமலும் திருமணம் புரிந்து கொள்வதைத்தான் காண்கின்றோம்; சில நல்லிணக்கமான பண்புடையவர்கள் மகிழ்ச்சியில்லாமலும், அப்பண்பு அமையப் பெறாதவர்கள் மனநிறைவுடனும் வாழ்வதைப் பார்க்கின் றோம். வலுவந்த மாணவர்களும், விட்டுக் கொடுப்போகும், எளிதில் சினங்கொள்வோரும் சுறனையற்றோரும், நிலையான வரும் நிலையற்றவரும்-மண வாழ்க்கையில் ஒன்றி மகிழ்வுடன் இருக்கின்றனர்; அன்றி, மகிழ்ச்சியற்றவர்களாகவும் உள்ளனர். இதற்குக் காரணம் ஆளுமைகள் மோதுதலைப் பொறுத்தது என்றுதான் சொல்லவேண்டும். ஓரளவு பிற காரணங்களும் இருக்கலாம்.

பள்ளியில் பயிலும் மாணாக்கர்களிடையே ஆளு ைம வேற்றுமைகளைக் காணலாம். ஒரளவு கட்டுப்பாடுகள் அமைந்த வகுப்பறையிலும் இவற்றைப் பார்க்கலாம். சிலர் திட்டமான கருத்துடையவர்களாகவும் சிலர் வாய் திறக்கக் கூட அஞ்சுபவர்களாகவும், சிலர் பிடிவாத முடையவர்களாகவும், சிலர் தன்னம்பிக்கையற்றவர்களாகவும் இவ்வாறு பல்வேறு விதமாய் இருக்கக் காணலாம்.

வகுப்பறைக்கு வெளியே, ஒரளவு கட்டுப்பாடற்ற நிலையில் இந்த ஆளுமையின் கோலங்கள் இன்னும் தெளிவாகப் புலனாகும். அங்கு மாணாக்கர்களின் இயற்கை நிலை வெளிப் படுகின்றது. ஒருவனிடம் தன்னெடுப்பு மீதுார்ந்து நிற்கின்றது: அவன் பேச்சினால் பிறரை ஆளமுயன்கின்றான். இன்னொருவன் எளிதாகப் பிறருடன் ஒத்துப் போகின்றான்; விட்டுக் கொடுக் கின்றான். இந்தப் பண்புகள் எல்லா நிலைகளிலும் முற்றிலும் வெளிப்படுவதில்லை. இறுமாப்புடையவன் என்று பலராலும் கருதப்பெறும் ஒருவனுடன் நெருங்கிப் பழகும்பொழுது அவன் அன்பும் ஆர்வமும் உடையவனாக இருத்தல் தெரிகின்றது. இங்ஙனம் ஒவ்வொருவனும் பலவகையான சூழ்நிலைகளில்

க. உ. கோ.6