பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 39

உண்மையில் இரண்டாம் வயதிலிருந்தே கூட்டு விளையாட்டு ஒருவாறு தொடங்குகின்றது என்று தான் சொல்லவேண்டும்.

ஒரே வகையான விருப்ப நிலையும் அக்கறையும் உள்ள குழவிகள் நேருக்கு நேராகக் கூடி விளையாடி வருகின்றன. இத்தகைய குழுவில் சட்டதிட்டம் ஒன்றும் இல்லை. விளை யாட்டின்போது ஒன்று கூடும் கூடத்திலும்கூட ஒற்றுமையும் கருத்து வேற்றுமையும் உண்டு. ஆனால் பேச்சுக் கூட்டாளிகளாக இருக்கும்பொழுது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. பால்வேற்றுமை, பொருளாதார வேற்றுமை, சமய வேற்றுமை என்றவற்றிற்கெல்லாம் இடமின்றி இவை அமைகின்றன. இவற்றினின்றே தோழமை நிலை பழுக்கின்றது. பள்ளியினின்றும் ஒருங்கே வீடு திரும்பும்பொழுதும் விளையாட்டில் ஒருங்கே ஆடி வரும்பொழுதும் தோழமை முளைவிடத் தொடங்குகின்றது. எல்லா வயது நிலைகளிலும் இத்தோழமை விளங்கக்காணலாம்.

பின்பற்றல்' அல்லது சாயல்பிடித்தல் பண்பும் சமூக உணர்ச்சியை வளர்க்கின்றது. சமூகத்தின் பழக்க வழக்கங்கள் நம்முடைய பழக்க வழக்கங்களாகின்றன. ஒத்துணர்வு வளர் கின்றது. சில குழவிகள் தனிமரங்கள்போல் பிறருடன் பழகு வதில்லை. இவ்வகைக் குழவிகள் அகமுகர்களாக , அஃதாவது தம் எண்ணங்கள் உணர்ச்சிகள் ஆகியவற்றையே கவனிப்பவர் களாக, ஆகின்றனர். ஆசிரியர்கள் சமயோசிதமாகவும் படிப் படியாகவும் அவர்களைப் பிற குழவிகளுடன் விளையாடவும் கூடி வேலை செய்யவும் பழகவைத்து, ஒரளவு புறமுகர்’ களாகச் செய்ய வேண்டும்.

ஆண்-பெண் தொடர்பு : சிறுவர்களும் சிறுமிகளும் முதன் முதலாகச் சமவயதினரோடு சேர்ந்து விளையாடுங்கால் அவர் களுக்குள் ஏற்றத்தாழ்வு தலைகாட்டுவதில்லை. பள்ளியில் சேர்வதற்கு முன்னும் தொடக்க நிலைப்பள்ளி முதலாண்டிலும் இரு பாலாரும் சேர்ந்து விளையாடுகின்றனர். பழக்க வழக்கங் களோ பெரிய பிள்ளைகளோ தடுத்தாலன்றி ஒரு குழந்தை பெரும்பாலும் எதிர்பாலாரால் அமைக்கப் பெற்ற குழுவினில் சேர்ந்து விளையாடத் தயங்குவதில்லை. தொடக்கத்திலேயே சிறுவர்களும் சிறுமியர்களும் தக்க எண்ணிக்கைகளில் இருந்தால் சிறுவர்கள் சிறுவர்களோடும் சிறுமிகள் சிறுமியர்களோடும்

47. 15&Lipá-Imitation. 48. Joã(pāff-Introvert. 49, upgpast-Extrovert,