பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

கல்வி உளவியல் கோட்பாடுகள்



SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SA S ASAA AAAA SAAAAASA SSASAS SS SAAAAAS AA SAASAASAASAASAASAASAASAAAS

புலன்களின் முன்னர்த் தனித்துத் தோன்றுவது புலன்காட்சி; மனத்தின்கண் பொதுவாகக் காண்பது பொது உணர்வு. பொது உணர்வை மானதக் காட்சி என்றும் வழங்குவர்.

கற்பனை87 என்பது இன்னொரு அறிவுச் செயலாகும். கற்பனை என்பது புலன்களுக்கு எட்டாத பொருள்களை அறிவது. புலன்களை உறுத்தும் பொருள்களை அறிவது புலன் காட்சி. என் வீட்டிற்கு எதிரேயுள்ள கோவிலின் கோபுரத்தைக் காண்பது புலன்காட்சி: இராசராசசோழன் எடுத்த தஞ்சைக் கோபுரத்தை மனத்தின் கண் பார்ப்பது கற்பனை. புலன்காட்சி யில் வெளிப்பொருள்கள் மனத்தின் செயலை எழுப்புகின்றன; கற்பனையில் மனத்தின் தொழில் உள்ளிருந்தே எழுகின்றது. சிறுவர்களின் விளையாட்டுகளில் தோன்றும் ஒருவிதக் கற்பனை பாவனை' என்பது. சிறுவர்களின் விளையாட்டில் நாற்காலி கப்பலாகின்றது; செங்கற்பொடி வெடிமருந்தாகின்றது. ஊசல் பலகை இரயில் வண்டியாகின்றது. அவர்கள் விளையாட்டில் விலங்குகளும் பேசுகின்றன. சில சமயம் அவர்கள் வண்டி யோட்டிகளாகவும், பாற் காரர்களாகவும், ஆசிரியர்களாகவும் இன்னும் தம் மனம்போன போக்கில் பலவாறாகவும் உண்மை உலகுடன் ஒத்து நடிக்கின்றனர். இங்ங்ணம் மனத்தின் அறிவுக் கூறு புலன் உணர்ச்சி, புலன்காட்சி, மானதக் காட்சி, நினைவு, சிந்தனை ஆகியவற்றின் மூலம் துலங்கி வளருகின்றது.

குழந்தையின் வளர்ச்சியைச் சரியாக அறிவதற்கு அதை உடல் வளர்ச்சி, உள்ள க்கிளர்ச்சி வளர்ச்சி, சமூகப் பண்பு வளர்ச்சி, அறிவு வளர்ச்சி என நான்கு பகுதிகளாகக் கூறின போதிலும் அவை அங்ங்னம் தனித்தனியாக வளர்ச்சிபெற வில்லை. குழந்தை எல்லாத் துறைகளிலும் சேர்ந்தே வளர் கின்றது என்பதை நாம் அவசியம் அறிதல்வேண்டும்.

வளர்ச்சிப் பருவங்கள் குழந்தையின் வளர்ச்சி தொடர்ச்சியாக இருந்தாலும் அதில் சில முக்கியமான பருவங்களை உளவியலறிஞர்கள் பகுத்துப் பேசுவர். அவை வருமாறு:

குழவிப் பருவம் 0-2; அல்லது 3 வயது.

முன்.பிள்ளைப் பருவம் 3.5 அல்லது 7-வயது: மன வளர்ச்சிக்குரியது. -

67. & juspoor-Imagination. 68. Lurrai Gosar-Make-believe. 59. குழவிப் பருவம்.Intancy. 70. (psir-19sirosti'. Louih-Early childhood.