பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

107



நிலைமாறு பருவம்: 6 அல்லது 7.8 வயது: உடல்வளர்ச்சிக் குரியது. -

பின்.பிள்ளைப் பருவம் 8.12 வயது: மனவளர்ச்சிக் குரியது.

முன்.குமரப் பருவம் 12.14 வயது: உடல்வளர்ச்சிக் குரியது.

பின்.குமரப் பருவம் ! 14.18 வயது: மனவளர்ச்சிக்குரியது. சில சமயம் நிலை மாறு பருவத்தை நடுப் பிள்ளைப் பருவம்' எனவும் குறிப்பிடுவதுண்டு.

இங்ங்ணம் குழந்தையின் வளர்ச்சியைப் பல படிகளாகப் பிரித்தாலும் வளர்ச்சி ஆங்காங்கு ஒவ்வொரு படியிலும் முடி வெய்திப் பின்பு புதிதாகத் தொடங்குகின்றது என்று கருதுதல் தவறு; அஃது ஒரே தொடர்ச்சியாகவே போகின்றது. ஒரு பருவத்திற்குரிய சிறப்பியல்புகள் பிற பருவங்களில் காணப் பெறா என்றோ, ஒவ்வொரு பருவத்திற்குரிய சிறப்பியல்புகள் முழுவதும் மறைந்த பிறகுதான் அதற்கடுத்த பருவத்திற்குரிய சிறப்பியல்புகள் தோன்றும் என்றோ கருதவேண்டா. மேலும், ஒவ்வொரு பருவத்திற்குரிய வயது எல்லையையும் மறைமொழி: யாகக் கொள்ளவும் வேண்டியதில்லை. இவை யாவும் குழந்தைக்குக் குழந்தை மாறக் கூடியவை; இவை யாவும் குழந்தைகளின் குடிவழியையும் அவை வளர்ந்துவரும் சூழ்நிலை யையும் பொறுத்தேயிருக்கும். ஒவ்வொரு பருவத்தின் சிறப் பியல்புகளைச் சிறிது காண்போம்.*

குழவிப் பருவம் (0-3) வயது

இப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சி விவரங்களை ஆங்காங்கு முன்பே குறித்துள்ளோம். இது குழந்தை பெரும்பாலும் பெற்றோரைச் சார்ந்திருக்கும் பருவம். இப் பருவத்திலும் குழந்தை அன்னையின் பராமரிப்பிலிருக்கும். இதில் குழந்தை

71. p56960 loss of LIG53, to-Transition period. 72. 1st sör-19sit sper L LIGjai ib-Later childhood. 73. (péir-Gloprili Li (Gauth-Early adolescence. 74. L96ār-gjudgil, LIG56, th–Later adolescence. 75. (5Gililo shopgirl. L(56.11b-Middle childhood, இேவ்விடத்தில் பிள்ளைத் தமிழ் இலக்கிய நூலார் குறிப்பிடும் பருவ நிலைகளையும், உலாப் பிரபந்த நூலார் குறிப்பிடும் ஏழுவகைப் பருவ மாதர்களின் பருவ எல்லைகளை யும் ஒப்பிட்டுச் சிந்தித்து மகிழ்க. -