பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

127


(f) கூட்டத்தில் சேர்தல், குழுச்செயலில் பங்கெடுத் ல், குழுவைப்பற்றி அக்கறையின்றி இருத்தல், தானாகவே செயலாற்றுதல்:

(g) கூட்டத்தில் தலைமை வகித்தல், தலைமையை நன் னோக்கங்களுக்காகப் பயன்படுத்தல், தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தல், தீய முறைகளைக் கையாளுதல், இனிமையால் பிறரை நடத்துதல் அல்லது வலிமையால் ஆளுதல்:

(h) நீதி உணர்ச்சியைக் காட்டுதல்:

2. பெரியோர்முன் காட்டும் சிறப்பு நடத்தை:

(a) நட்பு, உதவி, உள் வாங்குதல், கூச்சம், எதிர்ப்பு, தோழமை உடைமை:

(b) பிறரைச் சார்ந்துள்ளானா? விடுதலை உள்ளவனா?

(c) பிறருடன் எப்படிப் பழகுகின்றான்? (ஒருவருடனா?) சிலருடனா? பலருடனா?)

(d) பாராட்டு, குற்றங்கூறல் முதலியவற்றைப் பெரிதும் கருதுகின்றானா? புகழை நாடுகின்றானா?

பிற நடத்தைகள்:

(a) பொருளாதார நிலை வேற்றுமை பாராட்டப் பெறுகின்றதா?

(b) அந்நியர்களிடம் காட்டும் அன்பு, மரியாதை, பரிகாசம், உபகாரச் சிந்தை:

(c) பிறர் துன்பத்தில் இரக்கம், கர்வம், சிரிப்பு:

(d) தாழ்வுணர்ச்சி, உயர்வுணர்ச்சி, கோள் சொல்லும் பழக்கம்:

குழந்தையின் ஆடைகள்:

(a) பாதுகாவலுக்கும் எளிய இயக்கங்களுக்கும் தன் உதவிக்கும் ஏற்றவாறு உடை அமைந்துள்ளதா?

(b) குழந்தை துணியைப்பற்றி அக்கறை கொண்டுள்ளானா?

(c) உடை அவன் தொழிலுக்கு உதவுகின்றதா? தடைசெய்கின்றதா?