பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

கல்வி உளவியல் கோட்பாடுகள்


VI. வேலைச் செயல்களும் விளையாட்டுச்
செயல்களும்

கைவேலையில்: (a) ஆர்வம் இருக்கின்றதா? (b) கவனம் இருக்கின்றதா? (c) சுயபுத்தியுடன் செய்கின்றானா? பிறரைப் பின்பற்றிச் செய்ன்கிறானா? (d) வேலைபற்றிய வினாக்களை அடிக்கடி விடுகின்றானா? (e) பிறர் உதவியை அடிக்கடி நாடுகின்றானா? ஓரொரு தருணத்திலா? (f) தானாகப் பொருள்களைத் தெரிந்தெடுக்கின்றானா? ஆசிரியர் நடத்துதல் தேவையாகின்றதா? (g) பல திறப்பட்ட பொருள்களைத் தெரிகின்றானா? அல்லது ஒன்றையேயா? (எடுத்துக்காட்டுகள் தருக) (h) பொருள்களையோ உண்மை நிலையையோ பயன் படுத்துங்கால் படைப்புத்திறன் அல்லது புனைவுத் திறன் காட்டுகின்றானா? (i) பிறரைக் குற்றம் சாட்டுகின்றானா? (j) மனச்சோர்வு ஏற்படுகின்றதா?

தோட்ட வேலையில்: (a) தோட்ட வேலையில் கருத்தைச் செலுத்துகின்றானா? (b) இலை, கொடி, செடி, பூ-இவற்றில் விருப்பம் காட்டுகின்றானா? அல்லது உதாசீனம் செய்கின்றானா? (c) தானாக அறியும் ஆற்றல் உளதா? (d) பல வினாக்களை விடுக்கின்றானா? (e) மேலும் பார்க்கவும் சிந்திக்கவும் ஆவல் உளதா? (f) ஓவியம் வரைய விருப்பம் உளதா? (g) சோதனை செய்ய ஆவல் உண்டா?

விளையாட்டில்: (a) தெரிந்தெடுத்த விளையாட்டுச் செயல், செலவிட்ட நேரம், பயன்படுத்திய பொருள்: (b) கட்டளைக்குட்படுகின்றானா? மீறுகின்றானா? (c) கட்சி நலன் நாடுகின்றானா?