பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

பெற்றது!) எல், டி வகுப்பில் பயிலும்போது (1940-41) ஒரு சாலை மாணாக்கர்; நல்லொழுக்கம் மிக்க என்கெழுதகை நண்பர்: மாணாக்கர் உணவு விடுதியில் தங்கியிருந்தபோது நெருக்கமாகப் பழகியவர், கல்லூரி நாளில் 'துரு துரு' வென்று அங்கும் இங்கும் ஓடிப் பொதுப்பணியில் ஆர்வங்காட்டி வகுப்புத்தோழர்களின் அன்பையும் பேராசிரியர்களின் மதிப்பையும் பெற்றுப் புகழுடன் திகழ்ந்தவர், இரண்டு ஆண்டுகள் ஆசிரியப் பணி ஆற்றி, நான்கு ஆண்டுகள் போர்த்துறையில் பங்கேற்றுப் பணிபுரிந்தவர். அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் மாவட்டக் கல்வி அதிகாரியாகவும், மூன்றரை ஆண்டுகள் அரசுத்தேர்வுகளின் செயலராகவும், ஆறு ஆண்டுகள் கல்வி இயக்குநரின் தனி அலுவலராகவும், நான்கு ஆண்டுகள் கல்வித் துணை இயக்குநராகவும், ஐந்தரை ஆண்டுகள் மண்டலப் பள்ளி ஆய்வாளராகவும், தாம் பயின்ற சைதை ஆசிரியர்க் கல்லூரியில் ஆறு ஆண்டுகள் முதல்வராகவும் பணியாற்றிப் பெரும்புகழுடன் ஓய்வு பெற்றவர். பணியாற்றிய காலத்தில், 'என் கடன் பணி செய்து கிடப்பதே' [1]என்ற குறிக்கோளுடன் பணியாற்றியதால் சகப்பேராசிரியர்கள், மாணாக்கர்கள், பொது மக்கள் மேலிடத்தார் இவர்களின் அன்புக்கும் பாராட்டுதலுக்கும் இலக்காகிப் பெரும் புகழ் பெற்றவர். இங்ஙனம் பல்துறை அனுபவம் பெற்ற அன்பரின் அணிந்துரையை இந்நூல் பெற்றது இந்நூலின் பெருமையைப் பன்மடங்கு உயர்த்துகின்றது; நூலாசிரியராகிய அடியேனுக்கும் பெருமகிழ்ச்சியை நல்குகின்றது. இக்கூறிய பெருமைகள் எல்லாம் பெற்ற நண்பர் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியமைக்கு என் அன்பு கலந்த நன்றி என்றும் உரியது.

பேராசிரியர் குருசாமிரெட்டியார் சைதை ஆசிரியர்க் கல்லூரியில் என் உளவியல் பேராசிரியர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டம் பெற்று இந்தியக் கல்விப் பணியாளராக {I.E.S) பணியாற்றியவர். சிறந்த முறையில் - ஆனால் சற்று விநோதமான முறையில் - கற்பிப்பவர்.

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை விறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர் குணம் இனையவும் [2]

பெற்றுத் திகழ்ந்தவராதலால், இவர் வகுப்பில் நிகழ்த்தும் பேருரைகளை' உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் பெரும்பயன் அடைவர். அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும் உடையவர். ஐயந் தீரப் பொருளை யுணர்த்தும் திறம் படைத்தவர். இவர்,

உரைக்கப் படும் பொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள் வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்[3]


  1. 4. அப்பர் தேவாரம் - 5, 19: 9
  2. 5, நன்னூல் 26, . 6. எடி 36.
  3. 5, நன்னூல் 26,