பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் #3 &

அதற்குள் பாய்கின்றது. அப்பொழுது அதனுடைய வால் அறுபட்டுத் தலைப் பாகம் மட்டிலும் உட்செல்லுகின்றது. இவ்வாறு கருவுற்ற முட்டை மிகப் பாதுகாப்புடன் அமைந் துள்ள சூழ்நிலையில், தாயின் கருப்பையில், வளர்ந்து இரண்டு அணு க்க ள க ப் பிரிகின்றது. இந்த இரண்டு அணுக்களும் நான்காகவும், நான்கு எட்டாகவும் இம்மாதிரி தொடர்ந்து பல இலட்சக்கணக்கான உயிரணுக்களாகப் பல்கிப் பெருகி வளர்கின்றன (படம்-20). இவை யாவும் கருவுற்ற ஒரே முட்டையினின்று தோன்றிடினும், இவை பல்வேறுவிதமாகத் துலக்கமடைகின்றன . இவற்றுள் சில தசையணுக்களாகவும், சில சுரப்பியணுக்களாகவும், சில் நரம்பு அணுக்களாகவும், சில எலும்பு அணுக்களாகவும் பிரிந்து வளர்கின்றன.

உள்ளனு: ஒவ்வோர் உயிரணுவிற்கும் உள்ளணு என்ற ஒரு பகுதி உண்டு. இது வேதியியல் முறையிலும் உடலியல் முறையிலும் அணு உடலின் ஏனைய பகுதியிலிருந்து மாறுபடு

படம் 20 : உயிரணுக்கள் பெருகி வளர்தல் கின்றது. அணு உடலின் பிற பகுதியின் செயல்வேறு; உள்ளணுவின் செயல்வேறு. தசையணுவின் பிற்பகுதி சுருங்கும் செயலையும், சுரப்பியணுவின் இப்பகுதி சுரத்தல் செயலையும், நரம்பணுவின் இப்பகுதி செய்திகளைக் கடத்தல்' செயலையும்;

26. துலக்கமடை-Develop. 27. e-circrgy-Nucleus. 28.°- Goušujurgo @paspujö-Chemically. *29. 3.1%) to Léo-Cell body.

30, #1-#51-Conduct.