பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

கல்வி உளவியல் கோட்பாடுகள்




மேற்கொள்ளுகின்றன. ஆனால் உள்ளணு, வளர்ச்சியிலும். அணுப்பிரிவிலும் பெரும்பங்கு கொண்டுள்ளது; உயிரணுவின் வாழ்வையும் உரத்தையும் நிலைநிறுத்துகின்றது. கருவுற்ற முட்டையிலுள்ள உள்ளணு வளர்ந்து இரண்டு உள்ளணுக் களாகப் பிரிகின்றன; இவை இரண்டும் தனித்தனியாக இரண்டு உயிரணுக்களிலும் சேர்கின்றன. ஓர் உயிரணுப் பிரிவிலும் இதே செயல்தான் நடைபெறுகின்றது. இதனால் நம்முடைய உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் ஒர் உள்ளணு உள்ளது என்றும், இந்த உள்ளனுவே கருவுற்ற முட்டையின் உள்ளணு விலிருந்து பிரிந்தது என்றும் நாம் அறிகின்றோம். எனவே, ஒரு தனியாளின் குடிவழியில் இலட்சக்கணக்கான உள்ளணுக்கள் அடங்கியுள்ளன என்றும், இந்த உள்ளணுக்கள் யாவும் கருவுற்ற முட்டையினின்று பிரிந்தவை என்றும், இந்தக் கருவுற்ற முட்டை தந்தை வழியொன்றும் தாய்வழி யொன்றுமாக வந்த இரண்டு உள்ளணுக்களின் சேர்க்கையால் உண்டானது என்றும் தெளி வாகப் பெறப்படுகின்றது. -

இதுகாறும் அறிந்தவற்றிலிருந்து குடிவழியைப் பற்றி மூன்று முக்கிய கருத்துகள் தெளிவாகின்றன: (1) ஒரு குழந்தையின் குடிவழி பெற்றோர் இருவரிடமிருந்து ஏற்படுகின்றது; (2) அது கருவுறும் பொழுதே நிலையாக அறுதியிடப் பெறுகின்றது; தாய் அக் கருவை ஒன்பது திங்கள் சுமந்து உணவூட்டத்திற்குக் காரண மாக இருந்தாலும் அதிகமான குடிவழியொன்றையும் அவளிட மிருந்து பெறுவதில்லை; (3) குழந்தையின் குடிவழி அதன் உடல் முழுவதும் பரவியுள்ளது; அதன் ஒவ்வோர் உயிரணு விலும் அது அடங்கிக் கிடக்கின்றது.

நிறக்கோல்கள்?! : ஒவ்வொரு உயிரணுவிலுள்ள உள் ள ணு விலும் கோல் போன்ற பொருள் கள் அடங்கியுள்ளன. இவற்றுள் சில நீளமாகவும், சில குட்டை யாகவும், சில நேராகவும் சில வளைந்தும் இருக்கும். ஆனால், - ஒரு தனியாளின் ஒவ்வொரு படம் 21 : மானிட உயிரணு உயிரணுவிலும் ஒரே வகை உயிரி விலுள்ள நிறக்கோல்கள் னங்களின் உடலிலுள்ள உயிரணு விலும் ஒரே எண்ணிக்கையுள்ள நிறக் கோல்கள் உள்ளன. இரப்பரில் மிக நுண்ணிய நூலிழுத்து 31. 50#G&m Gv & Gir-Chromosomes. (Chrome omsårlig நிறத்தைக் குறிக்கும்.) -