பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிவழியும் சூழ்நிலையும்

141


அதை நீளமாகவும் குட்டையாகவும் சிறுசிறு துண்டுகளாக வெட்டினால் எப்படியிருக்குமோ அவ்வாறு இந் நிறக் கோல்கள் தோற்றம் அடைகின்றன (படம்-21).

ஒவ்வொரு உயிரியின் உயிரணுவிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறக்கோல்களே உள்ளன. இதை முக்கியமாக நினைவிலிருத்த வேண்டும். ஈயின் உயிரணுவில் 4 இணை[1] நிறக்கோல்களும், எலியின் உயிரணுவில் 20 இணைகளும்

படம் 22 : மானிட உயிரணுவிலுள்ள நிறக்கோல்கள்: அவை 23 இணைகளாக வைக்கப் பெற்றுள்ளன

உள்ளன. சோளத்தின் உயிரணுவில் இருப்பவை 10 இணை; தக்காளியின் உயிரணுவில் இருப்பவை 12 இணை. மானிட உயிரணுவில் 23 இணை நிறக்கோல்கள் உள்ளன. இந்த நிறக் கோல்களை 23 இணைகளாகப் பிரித்து வைத்தால் ஒவ்வோர் இணையும் பார்வைக்கு ஒரேமாதிரி உருவமுடையதாக இருப்பது தெரியவரும் (படம்.22). உயிரணுப்பிரிவில், ஒவ்வொரு நிறக் கோலும் தன் நீளத்தை அச்சாக வைத்து இரண்டாக உடைகின்றது. ஆகையால் உயிரணு இரண்டாகப் பிரியுங்கால் ஒவ்வோர் உயிரணுவிலும் 23 இணை நிறக்கோல்கள் அமைகின்றன. இவை யாவும் கருவுற்ற முட்டையினின்றே தோன்றியவை ஆதலின், ஒவ்வொரு உயிரணுவிலும் குடிவழி அடங்கியுள்ளது.

இவ்விடத்தில் இன்னொரு முக்கிய செய்தியையும் நினைவிலிருத்த வேண்டும். ஒவ்வொரு உயிரணுவிலும் 23 இணை நிறக்கோல்கள் உள்ளன என்று மேலே கண்டோமல்லவா? அதனால் கருவுறுவதற்குக் காரணமான முட்டையிலும் விந்தணுவிலும் 23 இணை நிறக்கோல்களே இருக்குமென்று நாம் கருதுவோம். ஆனால், உண்மையில் அவ்வாறு இல்லை. ஒருவர்


  1. இணை-Fair.