பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

கல்வி உளவியல் கோட்பாடுகள்



லுள்ள ஜீன்கள் தம் செயலில் ஒரே மாதிரியான முறையில் செயற்பட்டால், அவற்றால் ஆக்கப்பெறும் சிறப்பியல்புத் தலை காட்டும். இவ்வாறு காட்டுவதற்கு வேறு இணை உயிரணுக் களின் தலையீடு: இல்லாதிருக்க வேண்டும். அவை மாறுபட்ட முறையில் செயற்பட்டால் இந்த இரண்டு ஜீன்களிள் வேறுபட்ட செல்வாக்குகள் ஒன்றாக இணைந்து இடைப்பட்ட சிறப்பியல் பினை விளைவிக்கலாம்; அல்லது ஒரு ஜீன் பிறிதொன்றின் செல்வாக்கை மறைத்தும் விடலாம். வேறொரு ஜீனை முன்னிலையில், வன்மையான ஜீன் ஒன்று ஒரு சிறப்பியல்பினை உண்டாக்குமேயானால் அது ஓங்கிநிற்கின்றதாகப் பேசப் பெறும்; மறைந்த உயிரணு பின்தங்கி நிற்கின்றதாகக் கூறப் பெறும். இவை பற்றிய முழுவிவரங்களை உயிர் நூல்களில் கண்டு தெளிக.

இனப் பெருக்க உயிரணுக்கள் உண்டாகும் பொழுது தாயிடமுள்ள முட்டையில் 23 நிறக்கோல்களும் தந்தையிட முள்ள விந்தணுவில் 23 நிறக்கோல்களும் அமைகின்றன என்று மேலே கண்டோம். ஒரு தனியாளிடமுள்ள முட்டைகள் (அல்லது விந்தணுக்கள்) நிறக்கோள்களின் பல்வேறுவிதமான இணைப்புக்களைப் பெறுகின்றன. 46 நிறக்கோல்களில் எந்த 23 நிறக்கோல்கள் ஒரு குறிப்பிட்ட முட்டை அல்லது விந்தணு விற்குப் போகின்றன என்பதைத் தற்செயல் தான் ஆறுதி யிடுகின்றது. கருவுறுதலால் மீண்டும் 46 நிறக்கோல்கள் அமைகின்றன. எந்த விந்தணு (ஆணிடமுள்ள எந்த 23 கோல் களின் தொகுதி) எந்த முட்டையுடன் (பெண்ணிடமுள்ள எந்த 23 நிறக்கோல்களின் தொகுதி) சேர்ந்து ஒரு புதிய தனியாள்ை உண்டாக்குகின்றது என்பதையும் தற்செயலே அறுதியிடு இன்றது. எனவே, குடிவழிச் சட்டங்கள் என்பவை (1) முட்டை யிலும் விந்தணுவிலும் உள்ள நிறக்கோல்கள் தற்செயலாக: இனம் இனமாகப் பிரிதலையும் (2) கருவுறுதலில் குறிப்பிட்ட விந்தணுக்களும் முட்டைகளும் தற்செயலாக'த் தொடர்பு கொள்வதையும் பொறுத்த சட்டங்களேயாகும். - :

இக் கூறியவற்றாலும் படம் 23-ஆலும் ஒவ்வொரு குழந்தை யும் தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் ஒரே மாதிரி குடிவழி யைப் பெறுகின்றது என்பது பெறப்படுகின்றது. இந்த ஒவ்வொரு

40. GADU 13uéwlf-Characterístic. 41. 38065uff{}-Interference 42. @iŝiâ Êþ pò-Dominant. 43. பின்தங்கி நிற்றல்.Recessive 44. As AEGoué-Chance.