பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

கல்வி உளவியல் கோட்பாடுகள்



அறிகின்றோம். ஆனால், கல்வி முறை ஒவ்வொரு குழந்தையின் திறமைக் கேற்றவாறு அமைதல் வேண்டும்; சிறந்த முறையிலும் வாய்ப்புகள் நல்க வேண்டும். குழந்தையின் சிறந்த துலக்கம் ஆசிரியரும் பெற்றோரும் திட்டப்படுத்தி வைத்திருக்கும் குறிக்கோள் நிலையை அடைவதில் அன்று; தான் குடிவழியாகப் பெற்ற மூலதனத்திற்கேற்ப சிறந்ததொரு நிலையை எய்த வேண்டும் என்பதுதான்.

                    சூழ்நிலையின் இயல்பு

சூழ்நிலையைப்பற்றிய சில கருத்துகளை மேலே கூறினோம். ஈண்டு மேலும் சிலவற்றைக் காண்போம். குழந்தை வளர்ச்சியில் சூழ்நிலை பல்வேறு வழிகளில் தனது செல்வாக்கைச் செலுத்து கின்றது. வளர்ச்சிச் செயல்கள் யாவும் உயிரியம்49, நீர், உணவு, சாதகமான தட்ப வெப்ப நிலைகள் முதலியவை தேவையான அளவு கிடைப்பதைப் பொறுத்துள்ளன. ஒருவருடைய பழக்கங் களும் திறன்களும்' அவர் சூழ்நிலையிலிருந்து பெறும் பயிற்சியைத் தரக்கூடிய நிலைமைகளைப் பொறுத்துள்ளன. தனியாளின் அறிவு அவர் பெற்ற பயிற்றலின் அளவையும் அவருடைய சமூக மனப்பான்மைகளையும் அவர் பங்கு கொண்ட சமூக நிகழ்ச்சிகளையும் பொறுத்தவை.

பொருள்கள் தூண்டல்களை விளைவித்தால்தான் அவை சூழ்நிலையாகும் என்று மேலே கூறினோம் அல்லவா? அதை மேலும் விளக்குவோம். பச்சைப்பட்டு விரித்தாலொத்த பச்சைப்பசேலெனத் தோன்றும் பரந்த பசும்புல்வெளி பசி யோடு துடிக்கும் நாய்க்கு வறட்சியான சூழ்நிலையாகும். அங்ங்னமே, குழிமுயல்கள் நிறைந்து கிடக்கும் புலம் பசுவிற்கு ஏலாத சூழ்நிலையாகும். தனியாளின் உடல் தேவை அல்லது உள்ளக் கவர்ச்சிக்கு முறையீடு செய்யும்பொழுதுதான் சூழ்நிலை பயனுடையதாகின்றது; அப்பொழுதுதான் ஏதாவது ஒரு வழியில் எதிர்வினை புரிய வாய்ப்பு ஏற்படுகின்றது. எது பயனு டையதாகும் என்பது தனியாள், அவருடைய குடிவழி, அவருடைய முன்னநுபவம், அவருடைய உடல் வயது: மனவயது: ஆகியவற்றைப் பொறுத்தது. மருதநிலக் காட்சி களை எத்தனையோ முறை கண்டிருக்கின்றோம். அது நம்

49. 2-uśiñulb-Oxygen 50. 6\¡p3äT-Skill. 51. uust bpéir-Teaching. 52. a-Lóð Gulugi-Chronological age. 53. Losor su lug-Mental age.