பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

கல்வி உளவியல் கோட்பாடுகள்



களுக்கு முன்னரே துடிப்புகளைக் கடத்தத் தொடங்கி விடு கின்றன. தண்டுவட மையத்தில் நேராகவோ இயைபு கரம்பு நுண்மங்கள் மூலமாகவோ கூடல்வாய்கள் ஏற்படுகின்றன. தண்டு வடத்தினுடையவும் மூளைத்தண்டினுடையவுமான கீழ் கிலை மையங்கள்" பிறப்பு ஏற்படுவதற்கு முன்னே செயற்படத் தொடங்குகின்றன; பிறப்பு எய்தியவுடன் செயற்படத் தயாராக உள்ளன.

  மூளை மூன்று குமிழ்கள்போல் தோன்றிப் பாகுபாடு அடை கின்றது. தொடக்கத்தில் மூளையின் மேற்பரப்பு வழுவழுப் பாக இருக்கும். நாளடைவில் பல மடிப்புகள் தோன்றி அவை புறணியாக அமைகின்றன. நரம்பிழைகள் வளர்ந்து கூடல் வாய்கள் ஏற்பட்டு மூளையின் இயைபு மையங்கள் ஆகின்றன. புறணியின் சில பகுதிகள் பாகுபாடுபெற்று சில பார்வைச் செய்திகளையும், சில கேள்விச் செய்திகளையும் ஏற்பவைகளாகின்றன. மூளையின் இயக்க எல்லையிலுள்ள உயிரணுக்களி லிருந்து இழைகள் தண்டுவடத்திற்குச் செல்லுகின்றன. மூளை யின் இரண்டு அரைக்கோளங்களும் உடலின் எதிர்ப்பக்கங்களுடன் இணைக்கப்பெறுகின்றன. அவை விருப்பச் செயல்கள் செல்லும் வழிகளாகும். பன்னிரண்டு இலட்சங்கோடிக்கு: மேற்பட்ட மூளை உயிரணுக்கள் பிறக்கும்பொழுதே புறணியில் உள்ளன என்று கணக்கிட்டுள்ளனர். பிந்திய வளர்ச்சி உயிர ணுக்களின் எண்ணிக்கையைப்பற்றியதன்று; அஃது அவற்றின் நீளம், பருமன், தொடர்புபோன்ற கூறுகளைப்பற்றியது பெரு மூளையின் புறணி பிறக்கும்பொழுது மிக விரிந்துள்ளது; ஆனால், அதன் உள்ளமைப்பு மிக உயர்ந்த முறையில் வளர்ச்சி பெறவில்லை. பிறந்து பல வாரங்கள் வரையிலும்கூட அது செயற்படுவதில்லை. புனிற்றிளங்குழவியின் நடத்தைக்கு அது ஒருகால் யாதொரு தொடர்புங் கொள்ளாதிருப்பினும் இருக்கலாம். - - -
  பிறப்பதற்கு முந்திய செயல்: ; பிறக்கும் வரையிலும் தனியாளின் வேலை, அமைக்கும் வேலையே. அவனிடம் இதயம், குருதிக் குழல்கள், புயங்கள், கால்கள், மூளை, நரம்பு கள், ஏனைய அடிப்படை உறுப்புகள் ஆகியவற்றை ஆக்கும்

68. ğ60 ULI 5rihi i 56öTLD5856ir-Connective neurones. 69, G.Lóð Gustuit-Synapse. 70. êġ filgwav Golcuñis¢ir-Lower centres. 71. Lisp off-Cortex.

72. இலட்சங்கோடி-Billion. - - 73. 19 spliugsbó5 (piššu Gouéb-Prenatal activity.