பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

கல்வி உளவியல் கோட்பாடுகள்



வேலைகளைச் செய்யும். ஒருவன் தன் போரூக்கத்தைத் தன்னுடைய தோழர்களைத் தாக்கவும் பயன்படுத்தலாம்; தன் தோழர்களையோ பிற பெரியோர்களையோ வலியாரிடமிருந்து காப்பாற்றவும் பயன்படுத்தலாம். இவ்வாறு உயர் மடை மாற்றம் செய்து தீய பலனுக்குப் பதிலாக நற்பலனையும். அடையலாம். - . . . மக்டுகல் என்பாரின் இயல்பூக்க விளக்கம்: மக்டுகல் என் பாரின் இயல்பூக்கக் கொள்கையை அனைவரும் ஒருவாறு ஒப்புக் கொள்வர். மனிதனுக்குப் பதினான்கு இயல்பூக்கங்கள் உண்டென்றும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உள்ளக் கிளர்ச்சிகளோடு இணைந்துள்ளன என்றும் மக்டுகல் கூறினார். அவர் வகுத்த இலக்கணம் இது: இயல்பூக்கம் முதலில் ஒரு பொருளைக் கவனிக்கின்றது. பிறகு அதனால் எழும் உள்ளக் கிளர்ச்சியை உணர்கின்றது. அதன்பின் அதனை அடைவதற் கான ஒரு செயலைப் புரிகின்றது. (எ.டு. பசி உண்டானதும் உடலின் தேவையை அறிகின்றோம். பிறகு உணவு வேண்டு மென்ற உணர்ச்சி உண்டாகின்றது. பசியைப் போக்கிக்கொள்ள உணவுப்பொருளை எடுத்து உண்கின்றோம். இயல்பூக்கம். இவ்வாறு செயற்படுங்கால் அதில் அறிவு, உணர்ச்சி, முயற்சி என்ற முக்கூறுகள் காணப்பெறுகின்றன. இந்த மூன்று கூறுகளில் உணர்ச்சிக்கூறே முக்கியமானது என்றும், இயல்பூக்கங்கள் தத்தமக்குரிய உள்ளக் கிளர்ச்சிகளுடன் இணைந்தவை என்றும் கூறி, முக்கியமான பதினான்கு இயல்பூக்கங்களையும் அவற்றுடன், இணைந்த உள்ளக்கிளர்ச்சிகளையும் தருகின்றார் மக்டுகல்.

இக்கொள்கை அறிஞர் யாவருக்கும் ஏற்புடைத்தன்று." இயல்பூக்கங்கள் உள்ளக்கிளர்ச்சிகளுடன் இணைந்தவை என்று. இவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாமாயினும், இன்ன இயல் . பூக்கத்திற்கு இன்ன உள்ளக்கிளர்ச்சிதான் உரியது என்று வரை. யறுப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. போரூக்கத்திற்கு வெகுளியும், ஒதுங்கூக்கத்திற்கு' அச்சமும் நன்கு அமையும். ஆனால் உணவு தேடுக்கம், கட்டுக்கம் முதலியவற்றின் செயலில் இத்தகைய உள்ளக்கிளர்ச்சி நிலைகளைக் காண்பதரிது. அங்கணமே, நாய் குரைத்தல் சினத்தால்தான் என்று கூறுவது இயலாது; அஃது அச்சத்தாலும் தற்கர்ப்பாலும் உண்டாகலாம். மேலும், இயல்பூக்கம் என்னும் சொல் அறிதிறனின் மறுதலை. யாக வழங்கிவருவதால் மக்களின் செயல்களை இதனைக்

92. toé@*@-McDougall. --

93. Gum Géâtb-Instinct of pugnacity. 94. 93,813.ásth-Instinct of flight.