பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவல்-5

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

ஊக்குகிலை: நாம் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றோம். அவ்வாறு ஈடுபடுவதற்கு நம்முடைய தேவைகளே மூலகாரண மாகும். உயிரிகள் யாவும் தத்தம் தேவைகளைப் பெறுவதற்கு ஊக்கம் கொள்கின்றன. தேவைகளைப் பெறுகின்ற நாட்டத்தில் அவற்றைச் செலுத்தி ஊக்கும் ஆற்றலே ஊக்குநிலை என்ன்படும்.

எல்லாப் பிராணிகளும் பசி, தாகம், காதல் ஆகியவற்றால் தூண்டப்பெறுகின்றன. இந்தத் தூண்டுதல்களை உந்தல்கள்? என்று வழங்குவர் உளவியலார். இந்த உந்தல்கள் நம்மைச் சும்மா இருக்க வொட்டாமல் இயங்கவைக்கின்றன. இவண் கூறப்பெற்ற பசி, தாகம் முதலியவை உள்ளுறுப்புகளின் நிலை களாகும். இவற்றால் உள்ளுறுப்புகள் ஒருவித இறுக்கம் (fension) அடைகின்றன. இவ்விறுக்கத்தை நீக்குவதற்கு ஆவற்றிடம் இயற்கையாக ஓர் உந்தல் ஆற்றல் எழுகின்றது. இத்தகைய உந்தல்களே பலவித ஊக்கு நிலைகளுக்கு அடிப் படையாகின்றன. - - . . . . . . . துண்டுபொருள்களும் ஊக்கிகளும்: உணவு போன்ற பொருள்களும், தட்ப-வெப்பநிலை மாற்றங்கள் போன்ற நிலை களும், கழிவுப்பொருள்களை அகற்றல் போன்ற செயல்களும் ஊக்குதிலைச் செயல்களில் கொண்டு செலுத்துபவை. இவற்றைத் துண்டு பொருள்கள்’ என வழங்குவர் உளவியலார். இவ் விடித்தில் ஒன்று சிந்தித்தற்குரியது. தூண்டுபொருளால் உந்தப் பெறும் கடத்தை நேரிடுங்கால், உந்தல் என்ற சொல்லுக்குப்

1. našeg file osu-Motivation. - - - 2. உந்தல்கள்.Drives. 3. துரண்டுபொருள்கள்.incentives. 4. g3-#695-Behaviour