பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

கல்வி உளவியல் கோட்பாடுகள்



இங்கனமே ஒரு நோக்கத்தோடு ஒரு நூலைப்படித்தால் அந் நோக்கத்திற்கு இசைந்த பகுதிகளையே படிக்கின்றோம். ஒரு சொற்பொழிவைக் கேட்ட பலரைத் தாம் கேட்டவற்றை வெளி யிடச் செய்தால் அவர்கள் வெவ்வேறாக எழுதுவதைக் காண லாம். இதனால்தான் ஒரே பிரச்சினையைக் குறித்து வெவ்வேறு செய்தித்தாள்கள் வெவ்வேறு விதமான கருத்தமைந்த தலையங் கங்களைத் தீட்டுகின்றன. எனவே, எச்செயலைச் செய்தாலும் நோக்கங்கருதிச் செய்தல் வேண்டும். கற்றலில் வெறும் பயிற்சி யளிப்பதைத் தவிர்த்து, குறிக்கோளுடன் கற்கும் பயிற்சி யளித்தல் வேண்டும். அப்பொழுதுதான் திறமையாகக் க்ற்றல் நிகழும். -

மூன்றாவது: ஊக்கிகள் நம் நடத்தையை நெறிப்படுதுத் கின்றன. இச் செயல் தேர்ந்தெடுக்கும் செயலுடன் தொடர்பு கொண்டது. ஓர் உயிரி இயங்கினால்மட்டிலும் போதாது; அவ்வியக்க ஆற்றல் ஒரு குறியை நோக்கிக் கொண்டு செலுத்தப் பெறுதல் வேண்டும். அனைத்தையும் கற்றுவிட்டோம் என்ற அகந்தை கொண்டு களிப்பவர் அதற்குமேல் கற்கமாட்டார்கள். தம்மைவிட அதிகமாகக் கற்றவர்களை நோக்கிக் கருத்தழியச் செய்வதுடன் நில்லாது, எதைக் கற்கவேண்டும், எதனை எங்ஙனம் கற்க வேண்டும் என்ற நோக்கங்களையும் அவர்கள் முன்நிறுத்தினால், அவர்கள் நிறைந்த பயனை எய்துவர். பள்ளி களில் கட்டுரைப் பயிற்சி தருவதில் செம்மையான சொற்களைக் கையாண்டு தம் கருத்தைத் திறம்பட வெளியிட வேண்டும் என்ற குறிக்கோளை மாணாக்கர்கள் அறியச் செய்தால் சிறந்த முறையில் வெற்றி காணலாம். ஒரு சுவையான நிகழ்ச்சி: ஒரு மாணாக்கன் நான் விடுமுறை நாட்களை எங்ங்ணம் கழிப்பேன்?' என்ற பொருள்பற்றி ஒரு கட்டுரைக் கடிதம் எழுதி ஆசிரியரை அண்மி, ஐயன்மீர், யான் எழுதிய கடிதத்தை எப்பொழுது திருப்பித்தர இயலும்? எனக் கேட்டானாம். ஆசிரியர் அவனிடம், குழந்தாய், எனக்கு அதிக வேல்ை இருப்ப தால், உடனே திருத்தித் தர இயலாது. ஒன்றிரண்டு நாட்கள் கழித்து வருக என்றாராம். அதற்கு அம்ம்ாண்ாக்கின், ஐயன்மீர், ஒரு விண்ணப்பம். நான் அக்கடிதத்தை இன்றே அஞ்சலில் சேர்க்க வேண்டுமே? அருள்கூர்ந்து உடனே திருத்தித் தாருங்கள் என்றானாம். மாணாக்கனை ஊக்கியது யாது? அதன் வலிமை என்ன? - - ஊக்கிகளின் செயல்களையும் அவற்றின் வன்மையையும் அறிந்து ஆசிரியர்கள் பணியாற்றினால் கற்பித்தலில் நிறைந்த் பயனைக் காணலாம். - ... . . - -