பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

கல்வி உளவியல் கோட்பாடுகள்


(2) விரும்பத்தகாத துலங்கல்கள் குழந்தையிடம் ஏற்படாமல் அடைத்து விடுகின்றன.

(3) ஒரு குழந்தை தான் செய்வதற்கு ஆயத்தமில்லாத அல்லது செய்வதற்கு விரும்பாதவற்றைச் செய்யுமாறு கட்டாயப்படுத்துகின்றன.

(4) அடிக்கடி தவறு செய்வோர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைவதற்குக் காரணமாகின்றன.

(5) மாணாக்கர்களை வகுப்பு வேலையில் கவனம் செலுத்தத் தாண்டுகின்றன.

(6) கொடுக்கப்பெற்ற பொருளைக் கற்று கொள்வதற்கு ஊக்கிகளாக அமைகின்றன.

பரிசில்கள் இன்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. தண்டனைகளோ பயத்தை அடிப்படையாகக் கொண்டவை. உடல்வலி, மனத்தவிப்பு, கேலி, இகழ்ச்சி, பதவியில் வீழ்ச்சி, மதிப்புக்குறைவு முதலியவற்றைக் கொண்டு தண்டனைகள் கணக்க முயலுகின்றன. இவை யாவும் எதிர்மறை ஊக்கிகள். இவை வலிமையானவையே. இவற்றிற்குப் பயந்து பலர் இடப் பட்ட வேலையைச் செய்கின்றனர். ஆனால், இவற்றால் ஏற் படும் பயன் உண்மைப் பயன்தானா? இவற்றை எங்ஙனம் கையாளுதல் வேண்டும்? என்ற வினாக்கள் எழுகின்றன.

ஓர் எடுத்துக்காட்டைக்கொண்டு இதனை ஆராய்வோம். ஒரு மாணாக்கனின் அறிக்கை இது: "நான் வெறுப்பவர் எனக்கு நான்காம் வகுப்பு ஆசிரியராக அமைந்தார். மறுநாள் 1-லிருந்து 9-ஆம் பெருக்கல் வாய்ப்பாடுவரை ஒப்புவிக்காவிட்டால் உன்னை சுழித்துவிடுவேன்; மேல் வகுப்புக்குப் போக முடியாது என்று ஒருநாள் என்னிடம் கூறினார். அப்பொழுது வகுப்பில் தவறுதல் என்ற கருத்து எனக்கு மிகவும் பயங்கரமாக இருந்தது; ஆகவே, இரவில் நெடுநேரம் கண்விழித்து அவற்றை நெட்டுருச் செய்தேன். வகுப்பில் தவறினால் பெற்றோர்களிடமும் வகுப்புத் தோழர்களிடமும் எங்ஙனம் முகத்தைக் காட்டுவது என்ற அச்சத்தால் அன்றிரவு கண் விழித்தேன். இந்த ஒரு காரணத்தால் நான் இன்னும் கணக்கை அதிகமாக வெறுக்கின்றேன். எண்களால் நிரம்பிய பக்கத்துைப் பார்க்கும்பொழுதெல்லாம் அந்த ஈர்ப்பு உணர்ச்சி என்னிடம் எழுகின்றது.”

இந்த எடுத்துக்காட்டிலிருந்து யமுறுத்தலால் ஏற்படும் இரண்டு விளைவுகளை அறிகின்றோம். ஒன்று: பயமுறுத்துதல்