பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊக்கு நிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

187



கற்பனைத் திறன்களையும் சிந்தனையையும் பயன்படுத்தி இதனிலும் உயர்நிலை இன்பம் துய்க்கின்றனர்.

குழந்தைப் பருவத்தில் இன்பம் தந்த பல பொருள்கள் பிள்ளைப் பருவத்திலும், பிள்ளைப் பருவத்தில் இன்பம் தந்தவை குமரப் பருவத்திலும் இன்பம் தருவதில்லை. ஐந்து வயதுக் குழந்தை கிலுகிலுப்பை, சிறுதேர் முதலியவற்றை விரும்புவதில்லை. அதே குழந்தை கைவேலைகள் பலவற்றி லும், ஒவியம் வரைவதிலும் இன்பம் காண்கின்றது. இங்கணமே ஒவ்வொரு வயதிலும் இன்பப் பொருள்கள் மாறுபடுகின்றன.

கல்வித்துறையில் இன்பத்தின் பங்கு: மாணாக்கன் தான் இயற்றும் செயலை எஞ்ஞான்றும் விரும்பவேண்டுமாயின் பாடத் திட்டத்திலுள்ள செயல்களை கடினத்திற்கேற்றவாறு நிரல் படுத்தி அமைக்கவேண்டும். எந்த நிலையிலும் மாணாக்கன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்கள் இருத்தல் கூடாது; இதனால் ஊக்கம் குன்றாது மாணாக்கன் முன்னேறலாம். நடைமுறையில் எல்லாச் செயல்களையும் இங்கனம் அமைத்தல் எளிதன்று. அன்றியும், தவறுகளையே காணாமல் வளர வாய்ப் பளித்தலும் நன்றன்று. எனினும், போதிய அளவு இன்பம் பெறுமாறு பள்ளிச் சூழ்நிலை அமைந்தால் போதுமானது. தினவு எடுக்கும் கைகளுக்கும், துருதுருவென்று அலையும் கால் களுக்கும், மலர்ந்துவரும் சிந்தனைக்கும் ஏற்ற வாய்ப்புகள் தர வேண்டும். உயிரற்ற வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும் முறை அறவே ஒழிய வேண்டும்; அஃது அலுப்பு,எதிர்ப்பு, அச்சம் முதலியவற்றைக் கிளப்பிவிடும். இன்பத்தைப் பெருக்கு வதனால்தான் ஊக்கிகளுள் பரிசில்கள் தண்டனைகளை விடச் சிறந்தவை என்று மேலே கூறினோம். நவீனக் கல்வி இன்பத்திற்கு இடம் அளிப்பினும், நடை முறையில் அஃது அவ்வளவாக வற்புறுத்தப் பெறவில்லை. -

அன்பு :[1] வாழ்க்கையின் தொடக்கத்திலேயே அன்பும் தொடங்குகின்றது. சிறிது காலத்திற்குள் குழந்தையின் அன்பு, பொருள்களையும் ஆட்களையும் தொடர்கின்றது. பெற்றோர், உற்றார்,உறவினர் ஆகியோர் மேல் அன்பு சிறிது சிறிதாகப்படர் கின்றது. முதியோனாகுவதற்குமுன் குழந்தை வீடு, குடும்பம், சுற்றுப்புறம், நாடு போன்ற நிலையங்களுடன் பல்வேறு அளவு களில் அன்பை அமைத்துக்கொள்ளுகின்றது. நிலைமைகளுக் கேற்பவும் காலங்கட்கேற்பவும் அன்புப்பற்று வேறுபடுவதையும் காண்கின்றோம், -


  1. 46.அன்பு -Affection.