பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அன்பு அமையும் ஆற்றல் இயல்பானது. பெரும்பாலும் நாம்பெறும் அன்பு சமூகச் சூழ்நிலையைப் பொறுத்தது என்பது தெளிவு. சிறுவயதிலிருந்தே குழந்தை பெற்றோரின் அன்பினைப் பெறுகின்றது. அவர்களிடமும் தான் அன்பு பாராட்டுகின்றது. அன்பு ஒரு வழிச்செலவு அன்று. குழந்தைகள் பிறரிடமிருந்து அன்பு பெறுகின்றனர்; தாமும் பிறரிடம் அன்பு காட்டுகின்றனர். பிறர் புன்முறுவல் கொண்டால் தாமும் முறுவவிக்கின்றனர். சிறுவன் பிறரைக் கட்டித் தழுவுகின்றான்; பிறரோடு கொஞ்சுகின்றான். முதுகைத்தட்டிக்கொடுக்கின்றான். அண்ணன் தம்பி மாருடன் ஒவ்வொரு சமயம் சண்டை விளைவிப்பினும் பிறகு கொஞ்சிக் குலாவுகின்றான். வீட்டில் பெற்றோரின் அன்பையும் பள்ளியில் ஆசிரியரின் அன்பையும் நாடுகின்றான். விளையாட்டின் வாயிலாகச் சில பொருள்களின்மீது விருப்பம் கொள்ளு கின்றான். பால் முதிர்ச்சி எய்தியதும் இவ்வன்பு எதிர்பாலாரைத் தொடர்கின்றது. பிறகு மக்களுடன் இணைகின்றது. -

குழந்தை வாழ்க்கையில் அன்பின் சிறப்பு: படிமுறை வளர்ச்சி யில்[1] உயிருளிகள்[2]: உயர்நிலை அடைவதற்கு அன்பு பெரிதும் உதவுகின்றது. குழந்தை நன்கு வளரவேண்டுமானால், பெற்றோர் அதனிடத்து அன்பு காட்ட வேண்டும். தம்மிடம் பெற்றோர் அன்பு இருக்கும்வரை குழந்தைகள் தம்மைப்பற்றிக் கவலை கொள்ள வேண்டுவதில்லையன்றோ? -

இளமை என்பது உயிருளிகள் உலகமென்னும் பள்ளியில் கல்விகற்கும் காலமாகும். பூச்சிபோன்ற கீழ்நிலை உயிருளிகள் தம் புழுநிலை மாறியதும் உலகில் உணவு தேடிப் பிழைக்க வேண்டும். மக்களின் குழவிகளோ பதினாறாண்டுவரை பெற்றோரின் அரவணைப்பில் அமர்ந்திருந்து, உலக வெப்பத்தைத் தணித்துப் பொறுத்துக்சொள்ளும் முறையினைப் பலவகையாலும் பயில்கின்றன. இயல்பூக்கம்[3] முற்றி வளர்ந்து அறிவு நிலையோடு பொருத்தமுறுகின்ற காலமே இளமையாகும். அன்பு இல்லையானால், இளமையில்லை; இளமையில்லை யானால் உலகப் பயிற்சியும் இல்லை; அறிவு வளர்ச்சியும் இல்லை. அறிவுவளர்ச்சி இல்லையானால் படிமுறை வளர்ச்சியும் இல்லை. - -

பிறந்ததும் குழந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இல்லை. பல யாண்டுகள் வரையில் அது பிறரைச்-


  1. 47. படிமுறை வளர்ச்சி.Evolution.
  2. 48.-உயிருளிகள்Living beings.
  3. 49.இயல்பூக்கம் -Instinct.