பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கல்வி உளவியல் கோட்பாடுகள்


வரையில் அவனுக்கும் அவன் வாழும் சூழ்நிலைக்கும் இடையறாத இடைநிகழ்ச்சியும் இடைவினையும் நடைபெற்று வரு கின்றன. தனியாள் சூழ்நிலையால் பாதிக்கப் பெறுகின்றான்; சூழ்நிலை அவனை மாற்றுகின்றது. அவன் இடையறாது இயற்றும் இடைவினைகளால் சூழ்நிலையும் மாற்றப் பெறு கின்றது. இந்த இடைவினைகளால்தான் கல்வி ஏற்படுகின்றது.

குழந்தை அழுகின்றது. தாய் அதனை எடுத்துப் பாலூட்டு கின்றாள். அழுகை நின்று போகிறது. பிறிதொரு சமயம் அழுகின்றது; இப்பொழுது பசியால் அல்ல; சிறுநீர் விட்டதால் ஆடை நனையவே குளிரால் அழுகின்றது. தாய் நனைந்த ஆடைகளை நீக்கி வேறு ஆடைகளை உடுத்துகின்றாள்: படுக்கையையும் மாற்றுகின்றாள். அழுகை நிற் கிற து. அழுதால் பல நலன்களைப் பெறலாம் என்ற அநுபவத்தைக் குழந்தை பெறுகின்றது. டம்வில்லி'[1] என்ற அறிஞரின் கருத்துப் படி, கல்வி என்பது அதன் பரந்த பொருளில், தனியாள் தொட்டிலிலிருந்து சுடுகாடு போகும் வரையில் பெறும் எல்லாச் செல்வாக்குகளையும் அடக்கிக் கொண்டுள்ளது' என்பதாகும்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்லுமுன்னரே வீட்டிலும் தெரு விலும் விளையாட்டின் மூலமும் அன்றாட வாழ்க்கையின் மூலமும் எத்தனையோ செய்திகளைக் கற்கின்றன என்பதை நாம் அறிவோம். ஆகவே, கற்போரின் செயலையோ, உணர்ச்சியையோ, எண்ணத்தையோ மாற்றுவதே கல்வியெனப் படுகின்றது. நமது வாழ்க்கையை உற்று நோக்குங்கால் நாம் கணந்தோறும் தமது பெளதிகச் சூழ்நிலையோடும் சமூகச் சூழ் நிலையோடும் ஊடாடுகின்றோம். கல்வியின் நோக்கம் யாதெனில், நல்வாழ்க்கை நடத்த நம்மை நமது குழ்நிலைக்குப் பொருத்தமுறச் செய்வதில் துணை செய்வதாகும். இந்நோக் கத்தைப் பெற அது நம் செயல்களை மாற்ற முயலுகின்றது. ஆகலின், கல்வியின் இலக்கணமாவது ஒருவரை வாழ்க்கைக்குப் பொருத்தமுறுதற் பொருட்டு மாற்றம் செய்வதாகும்.

இனி, உளவியலைப்பற்றிச் சிறிது பார்ப்போம். உளவியல் என்பது உயிரியின் [2]மனச்செயல்களை வரையறுத்துக் கூறும் ஓர் அறிவியல் துறை. உயிருள்ள ஒரு மனிதன் மாறி மாறி வரும் உலகிலுள்ள பொருள்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏனை யோருக்கும் இடைவினையாற்றுவதைப் படிப்பதே உளவிய-


  1. 4டம்வில்லி- Dum ville,
  2. 5, 2உயிர் - Organism.