பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

கல்வி உளவியல் கோட்பாடுகள்


உற்சாகம் கலந்த முயற்சியால் நிறைவேற்றமுடியும் என்று கருதினார். விளையாட்டினால்தான் வேலையில் ஊக்கத்தை யும், உற்சாகத்தையும் அளிக்க முடியும் என்பதையும் கண்டார். விளையாட்டினால் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்ல விருந்தளிக்க முடியும் என்பதையும் அறிந்தார். எனவே, விளையாட்டுமுறை'யின் தந்தையுமானார்.

நாளடைவில் இம்முறை ஏனைய பாடங்களைக் கற்பிப் பதிலும் மேற்கொள்ளப்பெற்றது. வரலாற்றுப் பாடங்களைப் பயிலும்பொழுது கு.ழ வி. க ள் அலெக்ஸாண்டராகவும், செலூக்கலாகவும், புருடோத்தமனாகவும், சந்திரகுப்தனாகவும் சாணக்கியனாகவும் கோலம்பூண்டு வரலாற்றையே நாடகமாக நடத்தி வருதல் வேண்டும். புவியியலைப் பலப்பல காட்சிகளாக அமைத்து அந்தந்த நாட்டின் வழக்கங்களையும் பிறவற்றையும் விளையாட்டாக அமைத்தல் வேண்டும். இயற்பியல், இயற்கை துரல், உயிரியல் முதலியவற்றில் வரும் சோதனைகள் யாவும் குழந்தைகள் மிகமிக விழையும் விளையாட்டுக்களாக அமைய லாம். கணக்கினையும் வாழ்க்கைத்துறைச் செயல்திட்டங்களாக [1]அமைத்துக் கற்பித்தலும் இயலும்.

வேலையும் விளையாட்டும் : வேலையையும் விளையாட்டையும் வேறுபடுத்திக் காட்டுவதென்பது எளிதன்று; அவற்றிற்கு விளக்கத் தருவதும் கடினமே. வேலை வாழ்வுடன் இணைந்த ஒரு புறம்பான செய்கை; ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தேவையை வேலை முற்றுவிக்கின்றது. ஆனால், விளையாட்டில் புறம்பான நோக்கமொன்றும் இல்லை; அஃது ஒருவருடைய மகிழ்ச்சியின் பொருட்டே மேற்கொள்ளப்பெறுகின்றது. வேலை மகிழ்ச்சியுடன் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பெறுவதில்லை; விளை யாட்டு மகிழ்ச்சியுடன் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பெறுகின்றது. வேலையில் அதன் பயனைக் கண்டபொழுதுதான் மகிழ்ச்சி உண்டாகின்றது; விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் பொழுதே மகிழ்ச்சி ஏற்படுகின்றது. வேலை பல புறம்பான கட்டுப்பாடு கனால் மேற்கொள்ளப்பெறுவது; விளையாட்டில் பலகட்டுப் பாடுகள் இருப்பினும் அவை விளையாடுபவர்களே ஏற்படுத்திக் கொண்டவை. வேலை உண்மை வாழ்வை ஒட்டியது; விளை யாட்டு பாவனை உலகைச் சார்ந்தது.

மேற்கூறியபடி வேலைக்கும் விளையாட்டிற்கு முள்ளவேற்றுமை அவ்வளவு திட்டமானதன்று. வேலையனைத்தும் முக்கியமாய் இக்காலத்தில் துன்பம் பயப்பதென்று சொல்லு-


  1. 66. செயல் திட்டம்.Project.