பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

கல்வி உளவியல் கோட்பாடுகள்


விடுக்கின்றார். தன்னோக்க முயற்சி முறை, டால்ட்டன் திட்டம், மாண்டிசோரி முறை, கிண்டர்கார்ட்டன் முறை, நடிப்பு முறை போன்ற புதிய முறைகள் யாவும் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டவை. .

விளையாட்டு முறையின் நற்பயன்கள்: விளையாட்டுமுறை யால் பல நற்பயன்கள் விளைகின்றன. கட்டாயமின்மையால் குழந்தைகள் ஆர்வத்துடனும் பற்றுடனும் கற்றலில் ஈடுபடு கின்றனர். கல்விபற்றிய மனப்பான்மை அவர்களிடம் மாறி அறிவு நன்கு வளரத்தொடங்குகிறது. சிறுவர்களிடம் படிப்பில் பற்றும் கவர்ச்சியும் ஏற்பட்டு அதிகமாகக் கற்பர். விளையாட்டு குழந்தைகட்கு உடல் வளர்ச்சியையும் மன வளர்ச்சியையுல் நல்குகின்றது; புலன்கட்குப் பயிற்சி தருகின்றது. பொருள் களின் உண்மையான தன்மைகளை அறிவிக்கின்றது; அவ்வப் பொழுது தோன்றும் இயல்பூக்கங்களை நன்னெறிகளில் வழிப் படுத்துகின்றது. விளையாட்டு முறையால் குழந்தைகள் பல்வேறு பட்டறிவினைப் பெறுகின்றனர். அவர்கள் பல்வேறு துறைகளில் செயலாற்றவும், பல்வேறு பொருள்களைக் காணவும் பல்வேறு மக்களிடம் பழகவும் வாய்ப்புகள் உண்டாகும். .

மேலும், விளையாட்டு குழந்தையின் கற்பனையாற்றலை வளர்க்கின்றது. பாவனை, விளையாட்டின் ஒரு முக்கியக் கூறு. பாவனையுலகில் இயங்கும் குழந்தைகட்கு ஊஞ்சல் கப்பலாக மாறுகின்றது; மரக்கட்டை குதிரையாகின்றது; சிறுகுச்சி மோட்டாராகி விடுகின்றது. உயிரில்லாதவை உயிருள்ளவை யாகின்றன; பேசுகின்றன: அம்மா அப்பா விளையாட்டு, கடை வைத்தல், பள்ளிக்கூடம் வைத்தல் போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் பாவனையுலகில் தோன்றும் இன்பக் காட்சிகள்; உயர் கற்பனைகள்.

அன்றியும், விளையாட்டால் ஒத்துணர்ச்சி, விதிகளுக் கடங்கல், தலைவருக்குக் கட்டுப்படல், புறங்கூறாமை, பிறர் கருத்தை அறிதல், வெற்றித்தோல்விகளை ஒன்றுபோல் பாவித்தல் போன்ற குடிமைப் பண்புகள் வளர்கின்றன. விளையாட்டு ஒழுக்கத்தையும் அறிவையும் சீர்படுத்துகின்றது: களைப்பைப் போக்குகின்றது. இயல்பூக்க ஆற்றலைத் திறந்து விட்டு பல செய்திகளை எளிதில் கற்கவும், கைத்திறனை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பள்க்கின்றது. இம்முறையால் மனிதப்பண்பும் வளர்கின்றது என்று நம்புகின்றனர். மனிதன் தனியாக இயங்கும்பொழுது வேண்டிய துணிவு, புத்திகூர்மை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தன்னடக்கம் போன்ற பண்பு