பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றல்

207


பயன் பெறுகின்றான்; மூடனோ அங்ஙனம் பயன் பெறுவதில்லை.

தன்னியக்கம்[1]: கற்றல் என்பது ஒருவருடைய தன்னியக்கத்தாலேயே ஏற்படும் செயல். ஆசிரியரின் செயல் தூண்டுவித்தலுடன் நின்றுவிடுகின்றது; வழிகாட்டுவதுடன் அவர் பொறுப்பு முற்றுப்பெறுகின்றது. 'குதிரைக்கு நீர் காட்டலாமே யன்றி, அதனைக் குடிக்கக் வைக்க முடியாது’ என்ற பழமொழியை அறிக. நாம் கற்றவை அனைத்தும் சொந்தமாகக் கற்றலே ஆகும். எனவே, கற்பித்தல் கற்றலை மையமாகக் கொண்டது; கற்றலைத்தழுவியது; அத்துடன் தொடர்பு கொண்டது.

கற்கும் செயல்கள் பலதிறப்பட்டவையாயினும், அவை இயக்கத் திறன் பெறல்[2],கருத்துகளைக் கற்றல்[3]என இரு வகையினுள் அடங்கும். மிதிவண்டி சவாரி, தட்டச்சுப்பொறியினை இயக்குதல், நூற்றல் போன்றவை முன்னதில் அடங்கும். செய்யுளை ஒப்புவித்தல், கணிதத்தேற்றம் ஒன்றை செய்ப்பித்தல், ஒரு பொறி செயற்படும் நுட்பத்தை அறிதல் போன்றவை கருத்துகளைக் கற்றல் ஆகும்.

கற்பதில் சிறுவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுவர். கற்கும் ஆற்றல் சிறுவருக்குச் சிறுவர் மாறுபடும். சிலர் எளிதாகவும் விரைவாகவும் கற்பர்; சிலர் மெதுவாகக் கற்பர்; கற்பது கடினமானது என்று எண்ணுவர். சிலர் ஒரு முறை கேட்டதை உடனே திரும்பச் சொல்லுவர்; பலமுறை திரும்பத் திரும்பப் படித்த பிறகே சிலரால் ஒப்புவிக்க முடியும். கற்கும் ஆற்றல் சாதாரணமாக இருபது யாண்டுகள்வரை வளர்ந்து கொண்டு வரும் என்றும், அதற்குமேல் அதிகமாக வளராது என்றும் சோதனைகளால் கண்டறிந்துள்ளனர். முற்றிலும் புதியவற்றை இருபது யாண்டுகட்குமேல் கற்பது கடினம்.

கற்கும் முறைகள்: இனி, கற்கும் முறைகளைப்பற்றிச் சிறிது அறிவோம்.

முதலாவது:முயன்று தவறிக் கற்றல்[4]. விலங்குகள் தட்டுத் தடுமாறிக் கற்கின்றன. மனிதர்களும் சில சமயம் அங்ஙனமே கற்கின்றனர். கற்றல், நிலைமையுறு துலங்கலைப்போல்


  1. 4. தன்னியக்கம்-Self_activity.
  2. 5. இயக்கத் திறன் பெறல்-Motor learning
  3. 6. கருத்துகளைக் கற்றல்-Ideational learning.
  4. 7. முயன்று தவறிக் கற்றல்-Trial and error learning