பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றல்

243

கற்றல் 2.43

கையாளும் வாய்ப்புகளின்மையால் அவற்றை மறக்கின்றார். அவற்றைச் சரியாகப் படியாமல் தேர்ச்சியுற்ற வேறொரு புலவர், புலவர் வகுப்புக்குக் கற்பிக்கும் வாய்ப்புகளினால் அவற்றை நினைவிலே வைத்துக் கொள்கின்றார். அறிவியல் விதிகள் வாய் பாடுகள் ஆகியவற்றின் நுட்பங்களையும் தெளிவாகக் கற்ற ஒரு பட்டதாரி அரசினர் அலுவலகங்களில் பணியாற்றும் காரணமாக அனைத்தையும் மறந்து விடுகின்றார். இவை நடைமுறையில் நாம் காணும் உண்மைகள்.

இவ்விடத்தில் இன்னொன்று நினைவுகூர்தற்பாலது. பயிற்சி மட்டிலும் நிறைவினைத் தராது. தகுந்த இயக்கங் களைத் தெரிந்தெடுத்து வலியுறுத்தியும், தகாத இயக்கங்களைத் தடுத்தும் செய்யும் பயிற்சியே தேர்ச்சியைத் தரும். எடுத்துக் காட்டாக மிதிவண்டி ஏறிப்பழகுதல், கையெழுத்து, தட்டச்சுப் பொறியினை இயக்குதல் போன்றவற்றில் தொடக்கத்தில் கைவரப்பெறாத எளிமை, திருத்தம், பொருத்தம் முதலியவை பயிற்சியின் பயனாக நாளடைவில் ஏற்படுகின்றன. -

வகுப்பறையில் பொருத்தம் : தமக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் அடிக்கடிப் பயன்படுத்தும் வாய்ப்புகளிருப்பின் மாணாக்கர் நன்கு கற்பர். சில வாய்ப்புகளை இவண் கூறுவோம்: (i) அடிக்கடி வகுப்புச் சிறு தேர்வுகள் நடத்துதல்; (ii) வாய் மொழி வினாக்கள் மாணாக்கரின் குறையறிதலுக்கும் மாணக்கர் தம் அறிவை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தல்; (iii) மீள் நோக்கு பாடத்தை ஒருபாடத்தில் திரும்பப் பயிற்சி பெறுவதற்கும் பழைய அறிவையே புதிய அமைப்பில் வைத்துக்காண்பதற்கும் வாய்ப்பு அளித்தல்; (iv) தற்காலப் பள்ளிகளில் ஒப்புவித்த லுக்குப்" பதிலாக மேற்கொள்ளப்பெறும் கலந்தாய்தலைவில் நன்முறையில் பயன்படுத்தல்; (w) தக்கமுறையில் ஆய்த்தம் செய்யப்பெற்ற அளவான வீட்டு.வேலை பயிற்சிக்கு நல்ல வாய்ப்புகள் தருதல்.

மூன்றாவது-ஆயத்த விதி': இவ்விதி கற்பவனின் ஆய்த் தத்தை வற்புறுத்துகின்றது. இது முற்றுதலுடன் தொடர்பு கொண்டது. ஒரு தூண்டல்-துலங்கல் தொடர்பு ஆயத்தமா யிருந்தால் இயங்குதல் மனநிறைவினைத் தரும்; ஆயத்தமாயிரா விடில் இயங்குதல் துன்பத்தினை விளைக்கும்' என்பது விதி.

18. Lêsirúñirão Litrl-th-Review lesson. 19. § Ilysis #56)-Recitation. 20. #39;5&mit5&-Discussion. 21. 41.35 off-Law of readiness,