பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றல்

217



குறைவாக இருத்தலேயாகும். செயலுக்கும் அதன் விளை விற்கும் கால இடையீடு அதிகரித்தால் கற்றல் அரிதாகும், எடுத்துக்காட்டாக மலேரியா என்ற குளிர்க்காய்ச்சலுக்கும். மஞ்சட்காய்ச்சலுக்கும் கொசுவே காரணம் என்பதை இருப தாவது நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கண்டனர். அது வரை மக்கள் கொசுவால் கடியுண்டதை அறியாமல் இல்லை. சிலகாலம் கழிந்தபிறகே அந்நோய்கள் அவர்களைத் தாக்கின. கொசுவால் கடியுண்டதற்கும் நோயால் துன்புற்றதற்கும் கால இடையீடு அதிகமாக இருந்ததனால் ஒன்று மற்றொன் றுக்குக் காரணம் என்பதை அறியக்கூடவில்லை.

  ஆராய்வு: இஃதென்ன? அஃதென்ன? " என்று தொடர்ந்து கேட்கும் இயல்பும்-விடுப்பு -கற்றலுக்கு அவசியம். ஒரு குழந்தை தன் திறன் குறைந்த, துன்பம் நிறைந்த முறைகளாலும் ஒரு பொருளை ஆராயலாம். (எ.டு.) விளக்கு சுடும் என்று குழந்தை அறிவது. முதியோர் மூலம் அதிகத் தீங்கு நேரிடாத வாறும் அதனைக் கற்கலாம். (எ.டு.) :5000.வோல்ட்டு அபாயம் ” என்று செந்நிற அறிவிப்புப் பலகையால் மின்சாரத்தின் அபாயத்தை அறிதல். ஒவ்வொருவரும் அதைத் தொட்டுப் பார்த்துத்தான் அறிய வேண்டுமென்பதில்லை
  நோக்கமுடைமை நோக்கமுடைமையும் கற்றலுக்கு இன்றியமையாத ஏது. இதனை முன்னரே விரிவாகக் கூறியுள்ளோம். பிறர் தூண்டுதலின்றி மாணாக்கரே விரும்பியெடுக்கும் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுவதிலிருந்து இஃது ஒரளவு விளக்கமுறும். 
  ஊக்குநிலை"யில் உறைப்பு: ஊக்குநிலையும் கற்றலுக்குச் சிறந்த நிலைமையாகும். கற்பிக்கும் ஒரு பொருள் தேர்வுக்கு வரும் என்று ஆசிரியர் குறிப்பாக உணர்த்தினால் அதனைப் பெரும்பாலும் எல்லா மாணாக்கர்களும் நன்கு கற்கின்றனர். பெரும்பாலும் கற்பித்தலுக்கிடையே ஆசிரியர் கூறும் காதல், மனவசியநிலைபோன்ற செய்திகளை மாணாக்கர்கள் மறப்பதே இல்லை.
  செயலாற்றுதல்: கற்போன் கற்கும் பொருளோடு செயலாற்றுதலும் கற்பதற்கு இன்றியமையாத நிலையாகும். நீந்துதல், இசை, தட்டச்சுப் பொறியினை இயக்குதல், குடும்பப் பொருளாதாரம், நூல் நூற்றல் போன்றவற்றைச் சொற்பொழிவு

31. 67Guilf-Curiosity. -

32. estëgjistsɔ au-Motivation. 33. 2.60 split-Intensity.