பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 228

சென்னை அரசினர் 1953-ஆம் யாண்டு ஜூன் திங்கள் முதல் சிற்றுார்களிலுள்ள தொடக்க்கநிலைப் பள்ளிகளில் நடை முறைக்குக் கொண்டு வந்துள்ள கல்விமுறை மேற்கூறிய வேலை மூலம் கல்வி, அநுபவம் மூலம் கல்வி என்ற இரண்டு கொள்கைகளையும் கையாண்டு ஏட்டுப் படிப்பாக இராத உண்மைக் கல்வியைப் புகட்டும் நோக்கத்தைக் கொண்டது. குழந்தைகள் தங்கள் குடும்பத்தின் தொழிலைக் கற்கும் பொருட்டுப் பெற்றோர்களுடன் அதிக நேரம் தங்கியிருக்க அதிக வாய்ப்பு அளிக்கின்றது. குடும்பப் பண்பில் கவர்ச்சி ஏற்படும் கல்வி வாழ்க்கைத் தொடர்புடையது. சிற்றுாரைச் சேர்ந்த பயிர்த் தொழில் அல்லது வேறு கைத்தொழிலில் தேர்ச்சியடைந்த தொழிலாளியிடம் சிறுவர்கள் விடப்பெறுவர். உடல் உழைப்பின் உயர்வினை அவர்கள் நன்கு உணர்வர். இதனால் வழிவழி வந்த குடும்பத் தொழிலை விட்டுவிடாம லிருக்கவும் வாய்ப்பு ஏற்படும்.'

ஆசிரியர்களுக்கு: தற்கால ஆசிரியர்களுள் மிகவும் முன்னேற்றத்தை விரும்புகிறவர்கள் கற்றலை நேர் அநுபவத் தால் மட்டிலுமே பெறமுடியும் என்று கருதுகின்றனர். ஆனால், பண்டைய நெறியினர் நூல்களின் மதிப்பையே புகழ்வர். அன்றாடச் செயல்களில் மட்டிலுமே சொந்த அதுபவங்கள் பயன்படக்கூடும் என்றும், சிக்கலான கலைப்பொருளையும் சிந்தனைப் பொருளையும் அங்ஙனம் கற்க முடியாதென்றும் இவர்கள் வாதிப்பர். இதில் உண்மை இல்லாமல் இல்லை. இருசாரார் கூறும் நெறிகளும் தனித்தனியே மாணாக்கர் கற்க வேண்டியவற்றிற்குப் பொருந்தா. நூல்கள் துவலும் நெறியால் நம் வாழ்க்கையைத் திருத்தியமைக்க முடியும் என்பதனை எவரும் மறுக்க முடியாது. அதே சமயம் அச்சிட்ட நூல் களுக்கு அடிமைப்பட்டிருந்த மக்களை விடுதலை செய்த புது நெறியார்க்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். இவ்விரண்டு முறைகளையும் நெறியறித்து, இடமறிந்து, ஏற்றவாறு பொருத்தியமைத்துக் கற்பித்தலால் விழுப்பயன் எய்தலாம். நல்லாசிரியர் இவ்வுண்மையைக் கடைப்பிடித்துக் கற்பிக்க வேண்டியது அவருடைய கடமையாகும். * .

51. இந்த அரசினர் திட்டம் அரசியல். கலப்பு F எதிர்ப்பிருந்தமையால் அறவே விட்டொழிக்கப் பெற்றது.