பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

237


அவன் வாழ்க்கையில் #G57¢ಸಹ697 விரும்பிக்கடும் என்பதை ஒரளவு அறுதியிடலாம்.

கவனம்' 鄰

நாம் கனவு நிலையிலிருக்கும் பொழுது எண்ணற்ற தூண்டல் கள் நம்மைத் தாக்கியவண்ணமுள்ளன; நாம் ஒரு தூண்டல் சிக்கலாகிய கடலில் மூழ்கியே வாழ்கின்றோம். நம்முடைய புலன்கள் சிலவற்றையே கொள்வன; பெரும்பாலானவை புலன்கள் அறியாமலேயே மறைகின்றன. இவ்வாறு நம் புலன் சுள் ஒரு தேர்தலை நடத்துகின்றன; தம்முடைய மனமும் இக் தேர்தலில் பங்கு பெறுகின்றது. சில தாண்டற் கோலங்களை நீக்கிவிட்டு வேறு சிலவற்றிற்கேற்ப நாம் துலங்குகின்றோம்.

படம் 26

பல தூண்டல்கள் போட்டியிடுங்கால் அந்நேரத் தேவைக்கு ஏற்றவற்றை மட்டிலும் தேர்ந்தெடுக்கின்றோம். எடுத்துக் காட்டாக நம்முடைய சிந்தையைக் கவரும் நூல் ஒன்றினைப் படித்து வருங்கால், நம் அறையின் சுவரிலுள்ள கடிகாரத்தில் ஒயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிக் ஒலிகளைக் கேட்பதில்லை. சூழ்நிலையின் கண்ணுள்ள தூண்டல்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பெரும்பாலும் அதற்கேற்பத் துலங்கு வதையே நாம் கவனம் என்ற பெயரால் வழங்குகின்றோம்.

மனத்தை ஓர் ஒளிப்படப் பெட்டிக்கு ஒப்பிடலாம். எங்கனம் விளிம்பில் இருப்பவை பதியாமல் குவியத்தில் இருக்கும்

15. & sugarth. Attention.