பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

கல்வி உளவியல் கோட்பாடுகள்



தாய்மை உந்தல் ஆகியவை. நாம் பசியுடன் தெருவழியே செல்லும்பொழுது, சாளரங்களில் காணப்பெறும் உணவும் ரொட்டிக்கடைகளிலுள்ள மணங்களும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. பசி மீதுார்ந்து நிற்றலால் ஏனைய இன்ப மணப் பொருள்களின் பரிமளத்தை மூளை நோக்காமல் மேற்குறிப்பிட்டவற்றையே நாடுகின்றது. பாவில் கவர்ச்சியும் தாய்மை அன்பும் உட்சுரப்பிகளில் ஊறும் சாறுகளின் காரணமாகத் தூண்டப்பெறுகின்றன. தனியாள் பால்பற்றிய இயக்கு நீர்களின் (ஹார்மோன்களின்) ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கும் பொழுது எதிர்பால் வேட்கை உடன் தூண்டுதலை விளைவிக்கும். குழந்தை பிறந்த ஒரு சில திங்கள் காலத்தில், தாய் துரங்கும் நிலையில்கூட குழந்தையின் மிகச் சிறிய சிணுங்கலையும் அவளுடைய காதும் மூளையும் கூர்மையாக அறிந்து கொள்ளு கின்றன.

  (2) பிறவிப் பண்புகளும் பயிற்றலும்: இவையும் கவனத்தை அறுதியிடுகின்றன, மனிதனுடைய கவர்ச்சிகள் பல கற்பதால் உண்டாகின்றன. அவை கல்வியையும் பயிற்றலையும் சார்ந்து நிற்கின்றன. சாதாரண மக்களுக்கு வைரங்கள் யாவும் ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன. ஆனால், ஒரு வைர வணிகர் அவற்றின் தராதரங்களை எளிதில் அறிகின்றார். பெற்றோர்களும் மூத்தோர்களும் முக்கியமானவை எவை என அடிக்கடி எடுத்துக்காட்டுவதால், குழந்தைகள் சரியாகக் கவனிக்க வேண்டியவை எவை என்பதை நன்கு கற்கின்றன. இங்ங்ணமே பயிற்றலின் காரணமாகவும் நீண்ட அநுபவத்தின் காரணமாகவும் தாவர இயலறிஞர் பூக்களையும் பூண்டுகளையும் எளிதில் பாகுபாடு செய்து அறிகின்றார். கில உட்கூற்றியல்: அறிஞர் இயற்கையில் பாறைகள் உண்டாவதைக் கவனிக் கின்றார்; உளவியலறிஞர் கூண்டினுள்ளும் வெளியிலும் உள்ள பிராணிகளின் நடத்தையை அறிகின்றார். பிறவிப்பண்பின் பயனாகச் சிலரது கவனம் நிலையற்று ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்குச் சென்று கொண்டேயிருக்கும். சிலர் ஒவ்வொரு பொருளையும் ஆழ்ந்து கவனிப்பர். 

(3) தற்கால எண்ணம்: நமது தற்கால எண்ணமும் கவனத்திற்கு வேண்டிய ஒரு கூறு ஆகும். ஒரு சமயம் நாம் மேற்கொண்ட வேலைபற்றியவைகளை யெல்லாம் உற்று நோக்குகின்றோம். சினமுற்றிருக்கும்பொழுது தொந்தரவுகளையே கவனிக்கின்றோம். நாம் இரவில் வண்டியில் பயணம்

25. தில உட்கூற்றியல்-Geology.