பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

243


.

செய்யும்பொழுதும் நம் நாட்டுக் கால்நடைகளை நினைத்துக் கொண்டிருந்தால், இருபுறங்களிலும் காணும் ஆடுமாடுகளை நன்கு கவனிக்கின்றோம். இக்கூறினை மருந்து விளம்பரம் செய்வோர் நன்கு பயன்படுத்துகின்றனர். அவர்கள் நோய்களின் அறிகுறிகளை வற்புறுத்துகின்றனர்; படிப்போர் அவ்வறி குறிகள் தங்களிடம் இருப்பதாகப் பாவித்து மருந்துகளை வாங்குகின்றனர்.

  (4) எதிர்பார்த்தல் மனப்பான்மை எதிர்நோக்குதல் நாம் கவனிக்கத் தேர்ந்தெடுக்கும் அநுபவத்தைத் திட்டம் செய்கின்றது. நாம் ஒருவரோடு பேசவிரும்பினால் ஒரு மாபெருங் கூட்டத்தின் நடுவிலும் அவரைக் காண்போம். கடையில் நாம் வாங்க விரும்பும் பொருள் ஒன்றைப் பல பொருள் திரளின் நடுவிலும் பார்க்கின்றோம். காட்டிற்குச் சென்றால் பறவை அன்பன் குயிலின் இன்னோசையினைக் கேட்கின்றான். மரவனிகன் மரங்கள் வெட்டுவதற்கு உதவுமா என்று ஆராய்கின்றான். இவனுக்குப் பறவையின் இன்குரல் கேட்பதில்லை. எதிர்பார்த்தலாவது எதிர்பார்க்கப்பெறும் அநுபவத்தைச் செய்து பார்ப்பது போலாகும். அவ்வதுபவம் தோன்றுங்கால் அத்தோற்றம் நாம் முன்னே பழகிய நண்பனைச் சந்தித்தது போலாகும். 
  (5) கவர்ச்சிகள்: இவைபற்றி மேலே கூறியுள்ளோம். மேலும் ஒரு சில எடுத்துக்காட்டுகளை ஈண்டுக் கூறுவோம். நம் முடைய கவர்ச்சிகளுக்கு ஏற்ற பொருள்களை நாம் ஊன்றிக் கவனிக்கின்றோம். அலுவலை நாடிக்கொண்டிருப்பவர் செய்தித் தாளில் தேவை' என்று குறிப்பிட்டுள்ள மிகச் சிறிய விளம் பரத்தையும் விரைவில் கண்டு கொள்ளுகின்றார்.
  ஆசிரியர்களுக்கு: கவனத்தைப்பற்றி மேற்கூறியவற்றிலிருந்து ஆசிரியர்கள் குழந்தைகளின் கவனத்தைப் பெறத் துறை நுணுக்கங்கள்" அறிந்து கொள்ளலாம். பல வண்ண சீமைச் சுண்ணாக்காம்பால் எழுதுதல், சொற்களின்கீழ்க் கோடிடல், சில சொற்களைச் சாய்த்து அல்லது தடித்து எழுதுதல், சைகைகளையும் குரலையும் சமயத்துக்குத் தகுந்தவாறு மாற்றுதல் போன்ற முறைகளை ஆசிரியர்கள் கையாள வேண்டும். குழந்தைகளின் கவர்ச்சிகளுக்கு முறையீடு செய்தல் வேண்டும். முதலில் குழந்தைகட்குக் கவர்ச்சியில்லாதவற்றில் கூட கவர்ச்சி தரும்படி அவற்றை இயல்பூக்கங்களுடன் இணைக்க

26. £300 Esso &###-Techniques,