பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

கல்வி உளவியல் கோட்பாடுகள்




வேண்டும். குழந்தைகட்கு அலுப்பும் களைப்பும் ஏற்படாத வாறு பள்ளிவேலைகளை அமைக்கவேண்டும். குழந்தைகள் பலவற்றைத் தாங்களே செய்ய விரும்புவர்; அதற்குத் தக்க வாய்ப்புகள் தருதல் வேண்டும்.

  கவனத்தின் வகைகள்: சாதாரணமாகக் கவனத்தை அறுதியிடும் கூறுகளை அடிப்படையாகக்கொண்டு அதனை மூவகையாகப் பிரித்துப் பேசுவர் உளவியலார். அவை அனிச்சைக் கவனம், இச்சைக் கவனம், பழக்கக் கவனம் என்பவை. கவனத்தின் வளர்ச்சி இந்த மூன்று படிகளில் முறையே நடைபெறுவதாகக் கொள்ளலாம். இளங்குழவியின் கவனம் முதல் வகையிலும், சமூக முதிர்ச்சியடைந்த குமரனின் கவனம் இரண்டாம் வகையிலும், கற்றறிந்த வல்லுநரின் கவனம் மூன்றாம் வகையிலும் அடங்கும் என்று கில்போர்டு30 என்ற உளவியலறிஞர் கூறுவர். 
  அனிச்சைக் கவனம்: ஒரு தடவைக்கு ஒரு கூறாகக் கொண்டு நேர் முறையில் இஃது அறுதியிடப்பெறும். ஒரு குழவியின் கவனம் அதனைச் சுற்றியுள்ள நிலைமாறும் விசைகளைப் பொறுத்தது. குழந்தை பசியினாலோ நோவினாலோ துன்ப முறாமலும், வேறு முறையில் ஈடுபடாமலும் இருந்தால் ஒவ்வொரு மாற்றமும் அதனிடம் திடீரென்று கவர்ச்சியைக் ஒளர்ந்தெழச்  ெச ய் யு ம். இக்கவனத்தை உண்டாக்கும் தாண்டல்கள் மிகவும் வன்மையானவை நாம் உளவியல் பாடம் படித்துக் கொண்டிருக்கும்பொழுது இரண்டு மூன்று வெடியின் ஒலிகள் கேட்கின்றன; படிப்பதை நிறுத்திவிட்டு அவ்வொலியைப்பற்றி ஆராய்கின்றோம். உடனே அது கம்பன் திருநாள் நிகழ்ச்சி தொடங்கப் போகின்றது என்று எண்ணி மீண்டும் படிக்கத் தொடங்குகின்றோம்.
  இச்சைக் கவனம் சற்று வயது வந்த குழந்தை அல்லது குமரப் பருவத்தினன் சமூக ஊக்கிகளால் ஆதிக்கம் பெற்றிருப்ப தால் தன்னுடைய கவனத்தைப் பெரும்பாலும் அகவயக் கூறுகளால் அடக்கியாள்கின்றான். இதற்கு அவன் வன்மை யான புறவயக்கூறுகளை எதிர்த்துத் தொடர்ந்து போராட வேண்டும். அன்றியும், அதே சமயத்தில் முரண்பட்டுள்ள அகவயக் கூறுகளுடனும் போராட வேண்டிவரும். இதனை

27. offéo-Involuntary. 28. §§604-Voluntary. 29. Lipšć-Habitual or non-voluntary. 30. &éüGurrif@-Guilford.