பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

கல்வி உளவியல் கோட்பாடுகள்



வேலையின் மீதுள்ள கவனம் ஒரு வாரக்கணக்கில், மாதக் கணக்கில், ஒருவரது வாழ்நாளின் பெரும்பகுதிகட நீடிக்கின்றது என்று கருதுகின்றனர். இவர்கள் கவனம் என்பதன் பொருள் அறியாதவர்கள்; இவர்கள் ஈடுபாடு அல்லது கவர்ச்சியை நினைந்து கொண்டு கவனத்தைப்பற்றிப் பேசுகின்றனர். ஒரு பொருளில் நாம் ஒருமணி நேரம் ஈடுபடுகிறதாகக் கொள் வோம். இப்பொழுது ஒரு மணி நேரமும் நாம் கவனித்ததாக நினைக்கின்றோம். உற்று நோக்கினால், உண்மை அவ் வாறில்லை என்பதை அறிவோம், பல சமயங்களில் நம் மனம் அலைந்து திரிந்து அதனை மீட்டும் மீட்டும் கவனிக்க வேண்டிய பொருளுக்கு இழுத்திருக்கின் றோம். உளவியலார் பல வினா டிகளே ஒரு பொருளைக் கவ னிக்க இயலும் என்று கூறுகின்றனர். இந்தப் படத் ைத ச் (படம் 27) சற்று நேரம் உற்று நோக்கினால், அது கவனத்தின் ஊசலாட்டத்தின் காரணமாக, ஒரு சமயம் குவிந்த திடப்பொருளாகவும் பிறிதொரு சமயம் குழிந்த திடப்பொருளாகவும்?" காணப்பெறுவதை அறியலாம். ரு மணி அல்லது இரண்டு மணி நேரம் ஒரு பிரச்சினையில் ஈடுபட்டிருக்கும் பொழுது, நாம் தங்கியிருக்கும் அறையை கவனித்தலும், பிரச்சினை தீர்ந்ததும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற நினைவுகள் எழுதலும், அண்மையில் கேள்வி யுற்ற கவர்ச்சிகரமான செய்திகளை நினைந்து பார்த்தலுமான சமயங்களும் உள்ளன என்பதை நன்கு அறிவோம்.

  ஒரு பொருளை நீண்ட காலம் கவனித்தல் என்றால், மீட்டும் மீட்டும் அதனைக் கவனித்தல் என்பதே. அப்பொரு வின் பல கூறுகளைக் கவனிக்கின்றோம். அதைப்பற்றிப் பல வினாக்கள் நம் சிந்தையில் எழுகின்றன; அவற்றிற்கு விடை தேடுகின்றோம். பயிற்றலில் சிறந்த ஆசிரியர்கள் குழந்தைகளிடம் பல வினாக்களைக் குறிப்பாக உணர்த்தி, எடுத்துக் கொண்ட பொருளின் பல கூறுகளைப் பார்க்கச் செய்கின்றனர்;

33. Gojš5-Convex. 34. Öğää-Concave. 35. திடப்பொருள்-Solid.