பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

249


ஈடுபடாதிருத்தல், கடினமான பாடம், தவறான கற்பித்தல் முறை, சிறுவர்களின் சிறு குறும்புகள், பாடத்தைப் பற்றிய முன்னறிவின்மை, பற்றின்மை போன்றவை கவனமின்மைக்குக் காரணங்களாகும்.

கவனக் கலைவு: தொடர்ந்து நடைபெறும் கவனத்தைச் சிதைவுறச் செய்வதே கவனக்கலைவு[1] என்பது. அஃதாவது கவனத்தை ஒரு பொருளினின்றும் இழுத்து மற்றொன்றில் செலுத்துவது. இதனால் பல செயல்கள் தடைப்படுகின்றன. மந்திரவாதிகள் இம் முறையைக் கையாண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். கவனக் கலைவினை விளைவிக்கும் பொருள் கவனிக்கும் பொருள் கொண்டுள்ள அதே புலன்களைத் தாக்கி னால், கவனம் அதிகமாகத் தடைப்படும். இதற்குக் காரணம் இரண்டாம் தூண்டல் கவனத்தை இழுப்பதும், இத் தூண்டலின் வலிமையால் முதல் தூண்டலின் செயல் மயங்குவதுமேயாகும். கவனக்கலைவு பெரும்பாலும் அகவயமான கூறுகளாலேயே ஏற்படுகின்றது, மனக்கவலைகள், தெளிவற்ற அச்சங்கள் ஒருவருடைய வேலைக்கு இடையூறுகளாம்.

கவனக்கலை வினால் திறமை குன்றுகிறது என்பது வெளிப்படை. ஒலி, சந்தடி மிகுத்த சூழ்நிலையில் வேலை செய்வதற்கு அதிக ஆற்றல் செலவாகின்றது. அமைதியான சூழ்நிலையினின்று வந்தவர்கள் இத்தகைய சூழ்நிலையில் இன்னும் அதிகமான ஆற்றலைச் செலவிடுகின்றனர்.

கவனக் கலைவினைக் கட்டுப்படுத்துதல்: புறத் தூண்டல் களின் தோற்றுவாய்களை நீக்குவதால் கவனக் கலை வினை ஓரளவு தடுக்கலாம். பள்ளிச்சூழ்நிலையில் உரத்த ஒலிகளும் கெட்ட நாற்றங்களும் கூடா. ஆயினும், வெளித்தூண்டல்களைக் கட்டுப்படுத்துவதைவிட, உட்கட்டுப்பாடு மிகவும் வேண்டப் பெறுவது. கவனக்கலைவு பாடத்திம் கவர்ச்சியின்மையால் நேரிட்டால், ஊக்குநிலையை ஆராய்ந்து அதற்கு முறையீடு செய்ய வேண்டும்.

கவனக் கலைவு ஏற்படுங்கால் தூண்டல்களுக்கும் செயல்களுக்கும் போராட்டம் நிகழ்கின்றது. இதில் அதிக ஆற்றல் செலவாகின்றது. அடக்கமுடியாத தூண்டல்கள் கவனக் கலை. விற்குக் காரணமாயின், அவற்றை அப்பொழுது அரைமனத் துடன் விட்டுக்கொடுத்து, பிறகு காலமும் இடமும் அறிந்து அதனை மேற்கொள்ளல் சாலப் பயனுடைத்தாம். சற்று ஓய்வு கொண்டால், கவனம் மீட்டும் எழும்.


  1. கவனக்கலைவு-Distraction.