பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

கல்வி உளவியல் கோட்பாடுகள்



புரிந்து கொண்டு தானும் அதனை இயற்ற முயலுதல் பயன்வழிக் கொள்ளும் ஆக்கக் கற்பனையாகும். இராம இலக்குமணர்களும் சீதாப்பிராட்டியும் சித்திரகூடத்திற்குப் போனார்கள் என்ற செய்தியைத் தெரிவிக்க வந்த கம்பன் மஞ்சுசூழ் சித்திரகூட மலை என்பதை,

  • குளிறும் வான்மதிக் குழவிதன்

சூல்வயிற் றொளிப்பப் பிளிறு மேகத்தைப் பிடியெனப்

பெரும்பணைத் தடக்கைக் களிறு நீட்டுமச் சித்திர

கூடத்தைக் கண்டார்' என்று கூறுவான். இதில் கூறப்பெற்றுள்ளது கம்பனின் முருகுனர் வகை படைப்பாக்கக் கற்பனை. இப்பாடலை மாணாக்கன் படித்து ஒளிவிடும் பிறைச்சந்திரன் கருமேகத்தின் கருப்பத்தில் இருப்பதையும், அது வெளிப்படுங்கால் மேகங்கள் இடிப்பதையும், இவ்வொலியினைக் கேட்கும் ஆண்யானை தன் பெண்யானைதான் பிளிறுகின்றது என்று எண்ணித் தன் துதிக்கையை நீட்டுகின்றதையும் கண்டு மகிழ்தல் முருகுணர் வகைக் கொள்ளும் ஆக்கக் கற்பனையாகும். - -

(3) கனவு வகைக் கற்பனை: இது கனவென்றும், பகற்கன வென்றும் இருவகைப்படும். கனவு உண்மை வாழ்க்கையில் பெறமுடியாதவற்றைப் பெறும் வகை என்றும், வருங்காலத் திட்டம் வகுத்தல் என்றும், அரைகுறையாகச் சிந்தித்த பிரச்சினைகளின் முடிவுத்தோற்றமென்றும், நம் உற்றாருக்கு திகழ்வதை நேரில் அறிவதென்றும் பலவிதமாகக் கனாத் திறம் உரைப்பர். பகற்கனவு வெற்றிக்கனவென்றும், துன்பக் கனவென்றும், கவலைக் கனவென்றும் மூவகைப்படும். கனவு ஒருவகைத் தற்காப்பு அல்லது விலகு முறை என்று உளவியல் அறிஞர்கள் கூறுவர். . -

கற்பனையின் கன்மை தீமைகள்: நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கற்பனை பல குறிப்பிடத்தக்க முறைகளில் முக்கியமான செயலாகத் திகழ்கின்றது. -

முதலாவது: அது செயலுக்கு உற்றதொரு வழிகாட்டி யாகத் துணைசெய்கின்றது. நமக்கு எதிர்காலத் திட்டங்களை வகுக்கத் துணைபுரிகின்றது. எனவே, கற்பனை அரசியல்

ممسی-سمجادویپ-سہ مارچ

62. கம்பரா.அயோத்.வனம்புகு.47. . 63. *fism lili powg chape (pango-Defence or escape

mechanism, . " .. ,