பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

259


மிகவும் போற்றப்பெறுதல் வேண்டும். ஆசிரியர் பாடநூலிலிருந்து படித்துச்சொல்லும் பொருளைக் குழந்தைகள் திரும்பவும் சொல்வது கல்வியாகாது. இத்தகைய கிளிப்பிள்ளைப் பயிற்சி அறவே ஒழியவேண்டும். இக்காலப் பள்ளிகளில் பள்ளியிதழ்கள் வெளியிடுதல், நாடகம் நடித்தல், விழாக்கள் அமைத்தல், மகிழ்ச்சிச் செலவுகள், பொருட்காட்சிகள் அமைத்தல் போன்ற வாய்ப்புகள் இருப்பதால், குழந்தைகளின் கற்பனையை நன்முறையில் வளர்க்கலாம். பள்ளியில் முறையணைந்த" வேலையால் மாணாக்கர்களின் கற்பனையைச் சிதைத்து விடாமல் மேற்கூறிய முறைகளாலும் பிறவற்றாலும் அதனை நன்கு வளர்க்க வேண்டும்.

சிந்தனை

சிந்தனையும் கற்றலின் ஒரு கூறு. சிந்தனைதான் மக்களை மாக்களினின்றும் வேறுபடுத்துவது. விலங்குகள் எந்த அளவுக்குச் சிந்திக்கின்றன என்பதை நாம் அறியோம். எனினும், இத்துறையில் மேற்கொள்ளப்பெற்ற சோதனைகளிலிருந்து உயர் இனத்தைச் சேர்ந்த மனிதக் குரங்குகள் சிறிதளவு சிந்திக் கின்றன என்பதை அறிகின்றோம். சிந்தனை என்ற சொல்லை வரையறையின்றிப் பல மனச்செயல்களுக்கு வழங்குகின்றோம். முந்திய செயல்களை நினைத்தல், வருங்காலக் கற்பனை அமைத்தல், இப்பொழுது செய்யவேண்டியதைத் திட்டம் செய்தல் ஆகியவையும் சிந்தனை என்று வழங்குகின்றன. ஆனால், நாம் இங்குச் சிறப்பித்துக் கூறும் சிந்தனை ஒரு சிக்கலான மனச் செயலாகும். நம் பழைய முறைகளால் தீர்க்க முடியாத பிரச்சினை தோன்றினால் சிந்தனை தொடங்குகின்றது. சிந்தனையின்மூலம் தொடர்பையும் தொடர்புப் பொருளையும் அறிகின்றோம். பாம்பு, கீரி என்ற இரண்டு சொற்களையும் ஒருவர் சொல்லக் கேட்பின் பகைமை என்று நம் மனம் எண்ணுகின்றது; கொடுத்திருக்கும் இரண்டு பொருள்களையும் தொடர்புறுத்த நினைக்கின்றது. இதைத் தொடர்பறிதல்பிழை காட்டு: Invalid <ref> tag; refs with no name must have content: என்பர். ஒரு பொருளையும் தொடர்பையும் கொடுத்தால் நம் மனம் அத்தொடர்பிலுள்ள மற்றொரு பொருளை நினைக் கின்றது. பாம்பு பகைம்ை என்று கூறியவுடன் நம் மனம் "கிரி என்று நினைக்கின்றது. இதைத் தொடர்புப் பொருளறிதல்: என்று வழங்குவர். மானிட வாழ்க்கையின் தரமும், மானிட்