பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

கல்வி உளவியல் கோட்பாடுகள்



இனத்தின் நலமும் முன்னேற்றமும் நம்முடைய சிந்தனையைப் பொறுத்தவை. நம்முடைய கற்பனையின் திறத்தினால்தான் தம்மிடையே புதியன புனைவோர், கலைஞர்கள், எழுத் தாளர்கள் வாழ்கின்றனர் என்பதை முன்னர்க் கூறினோம். ஆனால், இத்தகைய அறிவின் அருஞ்செயல்கள்யாவும் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த கற்பனையால்தான் இயன்றன என்பதை நாம் குறிப்பிடத்தான் வேண்டும். விடுதலையுடன் இயங்கும் வளமான கற்பனை இருக்கத்தான்வேண்டும். ஆனால், அக்கற்பனை ஒழுங்குபடுத்தப்பெற்று ஏதாவது ஒரு நோக்குடன் நெறிப்படுத்தப் பெறவேண்டும். இத்தகைய கற்பனைதான் சிந்தனை என்பது. சிந்தனை நெறிப்படுத்தப் பெற்ற கற்பனை; குறியீடுகளைக் கொண்டு இயங்கும் ஒருவகை மனத்தின் செயல்.

  சிந்தனையின் கருவிகள்19: சிந்தனையில் பங்குபெறும் கருவிகளைப் பொருள், கருத்து, குறியீடு என்று மூவகையாகப் பகுத்துப் பேசலாம். இவற்றை ஒவ்வொன்றாக விளக்குவோம்.
  (1) பொருள்: பொருள்களில் நாம் நேரில் காணும் பொருள்களும், நினைவுகூரும் பொருள்களும், கற்பனை செய்யும் பொருள்களும் அடங்கும், (i) தனிப்பொருள்கள்: முன்னோர்: என்று கூறும்பொழுது தந்தையையோ பாட்டனையோ நினைக் ஒன்றோம். பொது உண்மை விளங்க வேண்டுமாயின் தனி எடுத்துக்காட்டுகளை நோக்குகின்றோம். காந்தம் இரும்பை சர்க்கும் என்பதை அறியவேண்டின் ஒரு காந்தத்தைக் கொண்டு இரும்பு ஆணி சர்க்கப் பெறுகின்றதா என்று கவனிக் கின்றோம். (ii) பொதுமைப்படுத்திய பொருள்கள்: வடிவ கணிதத்தில் ஒரு முக்கோணம் வரைந்து ஒரு கோட்பாட்டை நிறுவுகின்றோம். ஆனால், அதைச் சமபக்க முக்கோன மென்றோ நேர்முக்கோணமென்றோ கட்டுப்படுத்துவதில்லை. நாம் கருதும் முக்கோணம் எல்லாவகை முக்கோணங்களையும் அடக்கியாள்கின்றது: அஃது ஒரு பொதுமைப்படுத்திய பொருள் இங்ங்ணம் வடிவகணிதம்பொதுப்பொருள்களைப்பற்றிக் இறுகின்றது; ஆனால், தனிப்பொருளைக் கொண்டு விளக்குகின்றது. (iii) இயங்கு தன்மை வாய்ந்த பொருள்கள்: ஒரு பொருளின் பிர்ச்சினையைத் தீர்க்க முயலுங்கால் அப்பொருள் இயற்றும் வினையைச் சிந்திக்கின்றோம். (எ.டு) வண்டி ஏறிச்செல்ல உதவுக், ஆணி அடிப்பதற்கு உதவும் என்று எண்ணுகின்றோம்.

69. புதியன புனைவோர்.inventor. 70, *(jo-Tool. - - 71. asiņai ssofi 35th-Geometry.