கல்வி உளவியலின் இயல்பும் அளவும்
9
அறிவு ஏற்பட்ட புறகு மக்களின் சிந்தை, உணர்ச்சி, சொல், செயல் முதலியவற்றைப்பற்றி நமக்கு உண்டாகும் கருத்திற்கும் அதற்கு முன்னிருந்த கருத்திற்கும் அதிக வேற்றுமை உண்டு. அவற்றைக் கண்டு நாம் அவ்வளவு அதிகமாக மயங்குவதில்லை என்பது வெளிப்படை.
அறிவின் பொருட்டே அனைத்தையும் அறிதல்: மனிதன் அறிவுள்ளவன். பயனுக்காகச் சிலர் செய்திகளை அறியினும் அறிவுக்காகவும் செய்திகளை அறியும் அவாவுள்ளவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அறிவுத் தினவினைப் போக்கிக் கொள்ள அவ்வாறு செய்கின்றனர். எப்பொழுதாவது இவை பயன்படும் என்ற நம்பிக்கையால் தம்முடைய நடத்தை யையும் பிறருடைய நடத்தையையும் கூர்ந்து ஆராய்கின்றனர். தனியாட்கள் எவ்வாறு சூழ்நிலைக்கேற்பத் துலக்க முறுகின்றனர் என்பதைத் தெளிவாக அறிதல் வேண்டும் என்று அறிவியல் உளவியலறிஞன் விழைகின்றான். எவ்வாறு நம். "கொள்வாய்களும்[1] மூளைகளும் நாம் காணும் உலகத்தையும் காணா உலகத்தையும் அறிந்துகொள்கின்றன என்றும், எவ்வாறு நம் அநுபவங்களை நம்மிடம் இருத்தி வைத்து அறிவாராய்ச்சியிலும் கற்பனையிலும் பயன்படுத்துகின்றோம் என்றும் தெரிந்துகொள்ள விரும்புகின்றான். இவ்வுலகில் சிலர் பொருள் திரட்டுவதிலும் சிலர் புகழை நாடி அலை வதிலும் உழல்கின்றனர்; சிலர் பகல்வெயிலில் காய்ந்து உழைத்து அமைதியாகக் காலங்கழிக்கின்றனர்; சிலர் தம் கொள்கைக்காகவும் தம் தலைவனுக்காகவும் மகிழ்வுடன் உயிரையும் கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றனர்; சிலர் எதிலும் ஒதுங்கி நிற்கின்றனர்; சிலர் பிடிவாதமாக உள்ளனர்: சிலர் கோழைகளாகவுள்ளனர். இக்குணங்களில் சிலவோ பலவோ ஒவ்வொருவரிடமும் அமைந்திதுள்ளன. இவற்றிற். கெல்லாம் காரணம் என்ன என்பதை உளவியல் அறிஞன் ஒரு பயனையும் கருதாது அவற்றிற்கெனவே ஆராய்கின்றான். உண்மையான, நிச்சயமான, அறிவினை அடையும் வழி மிக நீளமானது; அது கடினமானதுவுமாகும்.
சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் விளக்குவதிலும் துணை யாக இருத்தல்: சமூகப் பிரச்சினைகளை அறிவியல் முறையில். ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு உளவியல் உண்மைகள் பயன். படுகின்றன. இத்துறை இன்று சமூக உளவியல்' என்ற ஒரு தனித் துறையாகவே வடிவு பெற்றுள்ளது. மனிதன் வழிவழி
- ↑ 31.கொள்வாய்-Receptor,