பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

267


ஆய்தலில் இரண்டுவித துறை நுணுக்க முறைகளை90 மேற்கொள்ளுகின்றோம். ஒன்று, தொகுத்தறிமுற91; மற்றொன்று, பகுத்தறிமுறை92. எடுத்துக்காட்டுகளிலிருந்து பொதுவிதியை அறிதல் தொகுத்தறிமுறை. (எ.டு.) குளத்திலும் ஆற்றிலும் பாத்திரத்திலுமுள்ள நீரில் பல கட்டைகள் மிதப்பதிலிருந்து, கட்டைகள் நீரில் மிதக்கும் என்று ஊகிக்கின்றோம். இரும்புக் குண்டு, நீர், காற்று ஆகியவற்றைச் சூடாக்கி விரிவடைவதைக் காண்கின்றோம். இவை சடப்பொருள்கள்; எனவே, சடப்பொருள் சூட்டால் விரிவடைகின்றது என்று முடிவு கட்டுகின்றோம். பகுத்தறி முறையில் மேற்கூறியதற்கு எதிர்த்திசையில் செல்லுகின்றோம். (எ.டு. கட்டைகள் நீரில் மிதக்கும்; கடலில் போட்ட கட்டைகள் மிதக்கின்றன; ஆற்று நீரிலும் கிணற்று நீரிலும் போட்டகட்டைகளும் மிதக்கின்றன. பாத்திரத்தில் போட்ட கட்டையும் மிதக்கின்றது. இன்னோர் எடுத்துக்காட்டு, சடப்பொருள் சூட்டால் விரிவடைகின்றது. திடப்பொருள் சடப்பொருள்களில் ஒருவகை. இரும்பு திடப்பொருள். ஆகவே, இரும்பு சூட்டால் விரிவடைகின்றது. சோதனையால் இவ்வுண்மை சரிபார்க்கப்பெறுகின்றது. இங்ஙனமே நீர், காற்றிற்கும் சோதனைகள் செய்யப் பெறுகின்றன. .

மேற்கூறியவற்றை நுணுகி அறிந்தால் தொகுத்தறிமுறையில் இப்படிகளைக் காணலாம்: (1) பிரச்சினையை அறிதல்; (2) பிரச்சினையை தீர்க்கும் எடுகோள்களை நாடுதல்; (3) எடுகோள்களை ஒப்பிட்டு மதிப்பிடுதல்; (4) பாகுபாடு செய்தல்: (5) பொதுநிலைப்படுத்தி முடிவுக்கு வருதல். பகுத்தறி முறையில் நாம் காணும் படிகள்: (1) பிரச்சினையை அறிதல்; (2) முக்கியமான கூறுகளைப் பாகுபாடு செய்து பொதுமைப் படுத்துதல்; (3) பொதுமைகளைக் கொண்ட எடுகோள்களை நாடுதல்; (4) ஒவ்வோர் எடுகோளையும் ஒப்பிட்டு மதிப்பிடல்; (5) முடிவு காணுதல் என்பவையாகும். . -

பயிற்றலில்: சாதாரணமாகக் குழந்தைகள் தொகுத்தறி முறை ஆய்தலையே எளிதில் உணர்கின்றனர். ஏனெனில், அதில் காட்சிப் பொருள்களைக் கொண்டே ஆய்தல் தொடங்குகின்றது. பகுத்தறிமுறையில் கருத்துப் பொருள்களிலிருந்து ஆய்தல் தொடங்கவேண்டியிருத்தலின், அஃது அவர்கட்கு


90. துறை நுணுக்கம் - Technique. 91. தொகுத்தறி முறை -Inductive method. 92. பகுத்தறி முறை - Deductive method. 93. பாகுபாடு - Analysis.