பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

கல்வி உளவியல் கோட்பாடுகள்



அவ்வளவு எளிதன்று. முன்னதே சிறுவர்கட்கு ஏற்றது, தாமாகவே விதிகளைக் கண்டறிவதில் சிறுவர்கட்கு ஆர்வம் அதிகம். மேலும், அவர்களே கண்டவற்றை அவர்கள் எளிதில் மறக்கார். -

சிறு குழந்தைகளும் ஆய்தல் நடத்துகின்றன. சில பொருள்களை ஆய்வதில் கண்ட உண்மைகளை பிறபொருள்கட்குப் பயன்படுத்துகின்றன. எனவே, கல்வியில் எல்லா நிலைகளிலும் உண்மைகளை அறிவதையும், அவ்வுண்மைகளிலிருந்து ஆய்தலையும் கடைப்பிடிக்கவேண்டும்.

நினைவு

இன்றைய உளவியலார் கற்றல் மூளையில் மாற்றங்களை உண்டாக்குகின்றது என்று கூறுகின்றனர். இம்மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இருத்தப்பெறுகின்றன; இவை தனியாளின் நடத்தைமூலம் வெளிப்படுகின்றன. இந்நடத்தை தான் நினைவு94 என்பது. அஃதாவது மனம் தன்னுடைய செயலால் கருத்துகளைப் பதிந்து இருத்தி, திரும்பவும் தேவையானபொழுது வெளியிடுவதையே நினைவு என்ற சொல்லால் குறிக்கின்றோம். படிமங்கள்95 மூலம்தான் அநுபவங்கள் மனத்தில் சேமிக்கப்பெறுகின்றன. கிச்சிலிப்பழம் எப்படியிருந்தது என்பதை நினைவில் வைக்கவேண்டுமானால், அதன் மஞ்சள் போன்ற நிறம், உருண்டை வடிவம், தொளைகள் உள்ள தோல், ஊற்றுணர்ச்சி, மணம், சுவை ஆகியவை மனத்திற்கு வருகின்றன. இவ்வாறு கிச்சிலிப்பழம் என்ற கருத்தினைப் பெறுகின்றோம். இதனை உண்மைக் கிச்சிலிப்பழத் துடன் வைத்து நாம் மயங்குவதில்லை. அதற்குக் காரணம் நாம் பார்த்த பல கிச்சிலிப்பழங்களையும் திரும்பவும் நினைவு படுத்திக்கொள்வதே' யாகும். கிச்சிலிப்பழக் கருத்தே படிமம் என்பது. கற்பனையைப்பற்றி ஆராய்ந்தபொழுதும் படிமத்தைக் குறிப்பிட்டோம். படிமங்களே நினைவுச் செயல்களில் செயற்படுகின்றன.

நினைவின் கூறுகள்: நினைவில் நான்கு கூறுகள் அடங்கியுள்ளன. அவை: பதிவுபெறுதல்' அல்லது முத்திரைகளை வாங்குதல், இருத்துதல்' அல்லது கடந்த அநுபவங்களைச்


94. நினைவு - Memory. 95. படிமம் -image. 96. நினைவு படுத்திக்கொள் - Re.collect. 97. பதிவு பெறுதல்-Apprehension. 98. இருத்துதல் - Retention.