பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

269



சேமித்தல், மீட்டுமொழிதல் அல்லது கடந்த அநுபவங்களை நினைவு கூர்தல், மீட்டறிதல் அல்லது நினைவு கூர்ந்த கருத்து களை முன் அநுபவத்தில் அறிந்தவையாக இனங்கண்டறிதல்' என்பவையாகும். இந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் முக்கிய LBFఢనré) షt. நினைவில் வைத்துக்கொள்ளும் செயலைச் சரியாகவும் விரிவாகவும் பாகுபடுத்தி அறியவும் நினைவை மேம்பாடடையச் செய்யும் முறையை அறியவும் வேண்டு மானால், இவை ஒவ்வொன்றையும் தெளிவாக அறிந்து கொள்ளல்வேண்டும்.

SAASAASAASAASAASAASAAAS SAMMS JSASBASAMMSAMSMSAS SSAS SSAS .»...متمم مهساچسیجی بعبهد

பதிவு பெறுதல்: முன்னைய இயலில் கற்றலைப்பற்றிக் கூறிய அனைத்தும் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. அநுபவங்கள் பதிவு பெறுவதற்கும் அல்லது ஏட்டுமுறையில் படித்தவற்றை நன்றாகத் திரும்பக் கூறுவதற்கும் அதிகக் காலம் நினைவில் இருத்துவதற்கும் சில விதிகள் உள. அவற்றுள் உடல் தவம், சோர்வில்லாமையும் கவலையின்மையும், கவர்ச்சியும் கவனமும், தெளிவாகப் பதிதல், திரும்பத் திரும்பக் கூறுதல், பொருளோடு கூடிய அநுபவமும் செய்திகளும், காலம் இடையிட்டுத் திரும்பக் கூறுதல், முழுதாகவோ பகுதியாகவோ நெட்டுருச் செய்தல் போன்றவை மிகவும் முக்கியமானவை. ஈண்டு வகுப்பறையில் வற்புறுத்த வேண்டிய பயிற்சிகளை மட்டிலும் கூறுவோம்.

(1) கற்பதிலும் நெட்டுருச் செய்வதிலும் ஒரு திட்டமான நோக்கம் இருத்தல் வேண்டும். கற்கும் பகுதி நிரந்தரமாக நினைவு கூர்தலுக்கா அன்றி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டிலும் தினைவு கூர்தலுக்கா என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணாக்கர்கள் ஆண்டு முழுவதும் படிக்காமலேயே இருந்துவிட்டுத் தேர்வுக் காலத்தில் இரவும் பகலும் படித்துக் குழம்பிய நிலையிலுள்ளனர். தேர்வுக்குப் பல நாட்களுக்கு முன்னரே நன்கு விளக்கம் பெறும் வரையில் கற்று, சிறிது காலம் இடையிட்டுத் திரும்பவும் அதில் பயிற்சி பெற்றால் நலம் பயக்கும். நிரந்தரமாக நினைவிவிருத்தல் வேண்டியவற்றை அடிக்கடித் திரும்பக் கூறவேண்டும்; கற்கும் பகுதிகளின் இயைபுகளையும் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

(2) தெளிவாகப் பதிபவை அதிகக் காலம் நீடித்திருக்கும். முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டிலும் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும்.

99. 18Lʻ.6, QabrtíÁlgé-Reproduction. 100. Bull-s).5é-Recognition. 101. Gewässwl—o-Identification.