பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கல்வி உளவியல் கோட்பாடுகள்


யாகப்படைத்துக் கொண்ட நிலையங்களை மாற்றமுடியும் என்பது உளவியல் வல்லாரின் நம்பிக்கை. சமூகத்தில் எழும் பல சிக்கலான பிரச்சினைகளையும் உளவியல் முறைப்படி தீர்க்கலாம்; அவை எழாமலும் தவிர்க்கலாம். அண்மையில், உளவியலறிவின் பயனாலும் ஆராய்ச்சியாலும், பொருளியல் அரசியல், வரலாறு, சமூகவியல், மனிதவியல் போன்ற பல சமூகப் பிரச்சினைகளுக்கு விளக்கமும் தெளிவும் ஏற்பட்டுள்ளன. மனிதனுடைய சமூக நடத்தையையும் உளவியல் விளக்கு கின்றது.

சமூக நடத்தை என்பது கற்றுக்கொண்ட நடத்தையாகும். ஒவ்வொரு குழந்தையும் சமூகத்தினிடையே பிறந்து, சமூகத் தினிடையே வாழ்வதால் அதனுடைய நடத்தை சமூகத்தினிடம் உண்டாகும் பலவிதமான மாறுதல்களால் அமைகின்றது. குடிவழி [1]முறையில் கிடைக்கும் ஆற்றல்களும் சமூக வாழ்வின் பயனால் பலவிதமான மாறுதல்களை அடைகின்றன.

மனிதன் பிறந்ததும் ஒரு குழுவின் உறுப்பினன் ஆகின்றான். அவனுக்கு அதிக நெருக்கமான குழுவாக இருப்பது குடும்பம் ஆகும். அவன் பிறந்த குடும்பமும் அதனுடன் தொடர்புற்ற பிற குடும்பங்களும் சேர்ந்து அவனுடைய சூழ்நிலையாக அமை கின்றன. அதன் பிறகு குடும்பம் சாதியாகவும், சாதி சமுதாய மாகவும் அச்சூழ்நிலை விரிவடைகின்றது. இவ்வாறு சமூகங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாதிரியான பண்புடையனவாக அமைவது ஆற்றல் மிக்க உளவியல் போக்குகளின் விளைவேயாகும். ஆனால் சில சமயம் இந்தப் போக்குகளின் ஆற்றல் குன்றி, சேர்ந்துள்ள அமைப்பு சிதறிப்போகவும் கூடும். அங்ங்ணம் சிதறிப் போவதற்கும் உளவியல் கூறுகளே காரணம் என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். மனிதனுடைய நடத்தை அவன் வாழும் குடும்பம், சாதி, சமுதாயம் ஆகியவற்றால் வரையறுக்கப்பெறுகின்றது. இவ்வரையறை ஒழுங்கு செய் யாத வரையறை, ஒழுங்கு செய்த வரையறை என இரு வகைப்படும். ஒழுங்கு செய்யாத வரையறை மனிதனுடைய வலிமைக் குறைவை அடிப்படையாகக் கொண்டது. ஏதேனும் ஒரு வதந்தி கிளம்பியதும் மக்கள் கூட்டங் கூட்டமாகக் கூடித் தவறான செயல்களில் இறங்குவது இதற்கு ஒர் எடுத்துக் காட்டு. மக்களை ஒன்றாக இணைக்கும் ஆற்றல்களும், அவற்றைப் பயன்படுத்தக் கூடிய தலைவனும், மக்களிடையே குறிக்கோள் ஒற்றுமையும் இருக்குமாயின், அப்பொழுது ஒழுங்-


  1. 32.குடிவழி -Heredity.