பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 27 1

என்பது தெரிகின்றது. இதைத்தான் இருத்துதல் என்ற வழங்குகின்றோம்.

புலன் உணர்ச்சியின் பயனாக மனத்தில் பல படிமங்கள்'" தோன்றுகின்றன. இவற்றை நினைவுச் படிமங்கள்' என்று வழங்குகின்றோம். இவை ஒவ்வொரு புலனுக்கும் உண்டு. எடுத்துக்காட்டாக, திருப்பதி" என்ற சொல்லைக்கேட்டவுடன் பல்வேறு சாயல்கள் தோன்றுகின்றன. சிலரிடம் மல்ை: கோவில் இவற்றின் பார்வைப் படிமம் எழுகின்றது; சிலரிடம் கோவிந்தா, ஏழுமலை ஆண்டவா என்ற கேள்விப்படிமம் தோன்றுகின்றது; சிலரிடம் மலையேறுங்கால் தசைகளில் உண் டாகும் களைப்புப்படிமம் ஏற்படுகின்றது; சிலரிடம் குளிர்ந்த மலைக்காற்றின் ஊற்றுப்படிமம் உண்டாகின்றது. இங்ங்னமே சிலரிடம் பகலவன் கதிர்களின் வெப்பப்படிமமும், சிலரிடம் வேப்ப மரங்களின் நாற்றப்படிமமும், சிலரிடம் மலையில் உண்ட *கட்டமுது பிரசாத வகைகளின் சுவையின்ப படிமமும் தோன்றுகின்றன. இவை யாவும் புலன் உணர்ச்சியின் பயனாக ஏற்பட்டவை. -

அநுபவங்களும் எண்ணங்களும் இயைபுற்று ஒன்றை யொன்று நினைவூட்டுகின்றன. மூன்று நிலையில் இவை நிகழ்கின்றன. (1) தொடர்புள்ள செய்திகள்: (எ.டு) வீட்டின் பெயர் அவ்வீட்டில் குடியிருப்போரை நினைவுப்படுத்துகின்றது. கத்தி என்றதும் எழுதுகோலைச் சீவுதல் நினைவுக்கு வருகின்றது. (2) ஒப்பான இரண்டு பொருள்கள் (எ-டு) ஒருவரின் ஒளிப் படம் அவரை நினைக்கச் செய்கின்றது. இராமன் என்றதும் சீதையை நினைக்கச் செய்கின்றது. இட்டலி என்றதும் சட்னி நினைவுக்கு வருகின்றது. (3) முரணான பொருள்கள்: தட்பம் வெப்பத்தையும், நன்மை தீமையையும், கல்வி கல்லாமையையும், இன்பம் துன்பத்தையும் நினைப் பூட்டலாம்.

இருத்தலுக்குரிய ஏதுக்கள்: கற்றலுக்குச் சாதகமானவை அனைத்தும் இதற்கும் சாதகமானவையே. அவற்றை சண்டு நினைவுகூர்க. இருத்தல்பற்றிய ஒரு சில விதிகளை சண்டு எடுத்துரைப்போம். -

(1) பல் நிகழ்வுக: ஒரு பொருளை மீண்டும் மீண்டும் உரைத்தல் இயைபுகளை இருத்துகின்றது. (எ.டு வாய்ப்பாடு சிறுவர்களால் மீண்டும் மீண்டும் கற்கப் பெறுகின்றது.

.ബൺബ്

106. Lugitotb-Image. 101. kanawatu Ito outfissir-Memory Images. 108. Lágospa-Frequency. ' .