பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

273



  இருத்துதலைப் பயிற்சியால் மேம்பாடு' அடையச் செய்ய முடியாது என்று உளவியலார் கருதுகின்றனர்: அது பிறவியிலேயே அமைந்த கூறு என்பது அவர்கள் கருத்து.
  கினைவு கூர்தல்: இது மீண்டும் வருவித்தல் என்றும் வழங்கப்பெறும். கினைவு கூர்தலும் 114 மீட்டறிதலும் நினைவில் வைத்தலின் இரண்டு முக்கிய வழிகளாகும். நினைவு கூர்தல் என்பது பொருள் புலன்களுக்கு முன் இல்லாதபொழுது நினைவில் வைத்தல்; மீட்டறிதல் என்பது பொருள் புலன் களுக்கு முன் இருக்கும்பொழுது நினைவில் வைத்தல். ஒருவர் நம் முன் நிற்கின்றார்: நாம் அவர் முகத்தை மீட்டறிந்து அவரது பெயரை நினைவு கூர்கின்றோம். ஒருவரது பெயர் கூறப்பெறுகின்றது; நாம் அவரது பெயரை மீட்டறிந்து அவர் முகத்தை நினைவு கூர்கின்றோம். கடந்த அநுபவங்களை மீட்டும் நினைவுக்குக் கொண்டு வருதலே நினைவு கூர்தல் என்பது.
  நினைவுகூர்வதற்குச் சில உத்தி முறைகளை மேற்கொள்வதுண்டு. கவிஞர்கள் ஒரு செய்யுளின் ஈற்றெழுத்து ஈற்றசை ஈற்றுச்சீரை அல்லது முறையே அடுத்த செய்யுளின் முதல்எழுத்து, முதல் அசை அல்லது முதற்சீராக வருமாறு தொடர்ந்து செய்யுட்களை அந்தாதித் தொடையாக அமைத்துப் பாடும் முறையை மேற்கொள்ளுகின்றனர். இதனால் படிப்பவர்கள் பாடல்களை எளிதாக நினைவுக்குக் கொணர முடிகின்றது. ஒரு பாட்டின் நான்கு அடிகளிலுள்ள எதுகைகளும் பாட்டை நினைவுக்குக் கொணரத் துணை செய்கின்றன. பாடல்களை நினைவு படுத்திக் கொள்வதற்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் அடிவரவு' என்ற முறை கையாளப் பெற்றுள்ளது. (எ-டு) திருப்பாவை முப்பது பாசுரங்களின் அடிவரவு பின்வருமாறு: மார்கழி வையம் ஒங் காழி மாயன் புள்ளு கீசு கீழ்வானம் து மணி நோற்று கற்றுக் கனைத்து புள் உங்கள் எல்லே நாயகன் அம்பர முந்து குத்து முப்பத்து ஏற்ற அங்கண் மாரி அன்று ஒருத்தி மாலே கூடாரை கறவை சிற்றம் வங்கம் தை."
  கதிரவமண்டலத்திலுள்ள கோள்கள்' கதிரவனிடமிருந்து தாம் இருக்கும் தொலைவிற்கேற்றவாறு எந்த முறையில் அமைக்


113. Guolbum G-Improvement. 114. நினைவுகூர்தல் -Recali. 115. Ifull-sigð-Recognition. 116. நினைவில் வைத்தல்.Remembering. 117. Garror-Planet. - க. உ. கோ. 18