பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

கல்வி உளவியல் கோட்பாடுகள்


:

எண்ணங்களே மொழி வடிவத்தை அடைகின்றன. எனவே, மொழி கற்பதில் பொது உணர்வுக் கருத்துகளின் வளர்ச்சிக்கு நாம் துணை செய்கின்றோம். பட்டறிவையொட்டிய சொற் களைக் கற்பிப்பதால்தான் பயன் காண முடியும்; பட்டறிவுக் கப்பாற்பட்ட சொற்களைக் கற்பித்தால் அது கிளிப்பிள்ளை யைப் பயிற்றுவது போலாகும். ஒரு குறிப்பிட்ட நிலையில் வளர்ச்சியும் தடைப்பட்டுப் போய்விடும். அதுபவத்தை யொட்டிய அறிவாக இருந்தால் மனம் எவ்வளவு வேண்டு மானாலும் ஏற்றுக்கொள்ளும்; எனவே, மொழியும் அநுபவமும் ஒன்றையொன்று வலுப்படுத்திச் செல்லும் முறையில் மொழி கற்பித்தல் நடைபெறல் வேண்டும். இவ்வாறு கற்பிக்கப்பெறும் புதிய சொற்களையும் பிற குறியீடுகளையும் புதிய முறைகளில் சேர்த்துப் புதிய உணர்வுகளை உண்டாக்கும் ஆற்றலைப் பெறவும் முடியும்.

பழக்கங்கள்

சிறுவர்களின் பிறவியிலேயே சில உளப்போக்குகள் அமைந் துள்ளன; அவற்றை நாம் இயல்பூக்கங்கள் என்கின்றோம். இந்த உளப்போக்குகளின் அடிப்படையில் நடைபெறும் புதிய நடத்தை சுற்றதின் பயனால் ஏற்படுகின்றது. ஒரு குழந்தை தானாக ஆடை அணிந்து கொள்ளவும், செவிலிப் பாடல்களைப் பாடவும், உணவுக்கு முன் கைகளைக் கழுவவும் கற்கின்றது. இவை பழக் கத்தால் ஏற்படுபவை. இச்செயல்களே பழக்கங்கள்!89 என வழங்குகின்றன. இயல்பூக்கச் செயல்கள் போலவே பழக்கச் செயல்களும் இயல்பாக நடைபெறுகின்றன. பழக்கம் இரண் டாவது இயற்கை என்பது ஒர் ஆங்கிலப்பழமொழி. பழக்கங்கள் பொறி இயக்கங்கள் போல் முதல் முயற்சியில் தோன்றாத விரை வையும் திட்டத்தையும் பெறுகின்றன. எனவே, பழக்கங்களே கற்றல் செயலின் முடிவுநிலை என்று கூறலாம். பழக்கம் () ஒரு செயல் திரும்பத் திரும்பச் செய்தலால் ஏற்படுகின்றது; (ii) பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அதை மீட்டும் செய்வதற்குக் கவனமும் முயற்சியும் தேவை இல்லை; (iii) ஒரே மாதிரியான சந்தர்ப்பங்களில்தான் பழக்கச் செயல்கள் நடைபெறும்.

நடு நரம்பு மண்டலத்தில் நரம்பு ஆற்றல் ஒரு மையத்தி லிருந்து பிறிதொரு மையத்திற்குப் பாயும்பொழுது அஃது ஒரு சுவட்டினை உண்டாக்குகின்றது; அதன் வழியாக மீட்டும் ஆற்றல் பாய்வது எளிதாகின்றது. கூடல் வாய்களில் தி டை குறைந்து ஆற்றல் எளிதாகச் செல்லுகின்றது. இஃது உடலியல்,

130. Lipšālā-Habit.