பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

கல்வி உளவியல் கோட்பாடுகள்


யீடின்றி விடாப்பிடியாக இயற்ற வேண்டும். ஒரு முறை தவறினால் நீண்ட பயிற்சியின் பயனை இழக்க நேரிடும். விருந்திலோ பிற இடங்களிலோ பலர் இன்று மட்டிலும் புகைப் பிடித்தலையும் குடித்தலையும் மேற்கொள்வோம்’ என்று அவற்றைச் செய்து கெட்டனர்.

ஆறாவதாக: புதிய துணிவை நிறைவேற்றுவதற்கு முதல் துணிவைப் பயன்படுத்த வேண்டும். பல முறையான நற்றுணிவு களை விட ஒரு நற்செயல் சிறந்ததாகும்.

ஏழாவதாக: பழகவேண்டிய தொழிலை முதலிலேயே துணுக்கமாகக் கவனித்துப் பழகவேண்டும். இதைச் செய்யா விடில், கெட்ட துலக்கங்கள் படிந்துவிடும். பிறகு அவற்றை அகற்றுவது கடினம். (எ.டு) குழந்தைகளுக்கு எழுதுகோலை எங்ங்னம், எவ்விடத்தில் பிடிக்கவேண்டும் என்பதைத் தொடக் கத்திலேயே கற்பிக்க வேண்டும். எழுதும்போது சொற்களுக்கும் வரிகளுக்கும் இடையே இடம்விட்டு எழுதவும், படிக்கும் போது நிறுத்திப் படிக்கவும் பழக்க வேண்டும். ர, ற, ல, ள, ழ இவற்றின் வேற்றுமைகளை நன்கு பழக்கவேண்டும்.

எட்டாவதாக: குழந்தைகளிடம் ஏற்படும் நற்பழக்கங்களுக்கு உடனே பலன் கிடைக்கச் செய்தல் வேண்டும். நற்பழக்கங் களுக்கு பரிசினை நல்கு; தீய பழக்கங்களுக்குத் தண்டனை வழங்கு' என்பது தார்ன் டைக் என்பார் கூறும் அறவுரை. ஆசிரியர் மிக விழிப்புடன் இதனைக் கையாள வேண்டும், ஆறுதலும் இன்பமும் பயக்கும் நடத்தை வளரும்; துன்பமும் தண்டனையும் தரும் செயல்கள் தேயும்.

ஒன்பதாவதாக: ஒரு பழக்கம் தொடங்கும்போதே ஆசிரியரின் கண்காணிப்பு வேண்டும். நன்றாகத் தொடங்குதல் பாதியை நிறைவேற்றுவதாகும்.

விரும்பத்தகாத பழக்கங்களை மாற்றியமைத்தல்: நம்முடைய பழக்கமே நம்முடைய வாழ்க்கை முழுவதையும் ஆளுகின்றது. எனவே, இளமையிலேயே பல நற்பழக்கங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கு முன்னர் அமைந்திருக்கும் விரும்பத்தகாத பழக்கங்களை முதலில் கள்ைவதே நற்பழக்கம் அமைதலுக்கு வழிகோலுவதாகும். இவை இரண்டுவகைப்படும்: (1) முற்பயிற்சி யின்பொழுது சில குறைபாடுகளால் தவறாக அமைந்தவை. (எ-டு) சரியாகப் படி எழுதும் பழக்கமின்மை போன்றவை. (2) நரம்பு சம்பந்தமான பழக்கங்கள். (எ.டு) நகம் கடித்தல் போன்றவை.

முதல் வகைப் பழக்கங்களைக் களைய வேண்டுமாயின் புதிய பழக்கங்களில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும்,