பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கல்வி உளவியல் கோட்பாடுகள்


தான் வாழும் அறையை நுண்ணிய நோய்ப்புழுக்கள் அழிமாறு, (Sterlize) செய்து கொள்ளுதல். தன்னை மாற்றிக் கொள்ளுவதிலும் சூழ்நிலையை மாற்றியமைத்துக் கொள்வதிலும் அவன் தனக்கும் சூழ்நிலைக்கும் இடையிலுள்ள தொடர்பை மாற்றுகின்றான்.

சில சமயம் தனியாள் சூழ்நிலைக்கேற்பத் தன்னைப் பொருத்திக் கொள்ளுகின்றான் என்போம்; சில சமயம் சூழ்நிலையைத் தனக்கேற்றவாறு பொருத்துகின்றான் என்று கூறுவோம். ஒன்றில் அவன் விட்டுக் கொடுக்கின்றான்; மற்றொன்றில் ஆட்சி செலுத்துகின்றான். தான் ஒர் ஊர்தியில் செல்லுங்கால் வழியில் ஒரு பாறாங்கல் இருந்தால், அதனை விலகிச் சென்று தன்னைப் பொருத்திக் கொள்ளுகின்றான் அல்லது அக் கல்லை அகற்றி விட்டு ஊர்தியைச் செலுத்துகின்றான். இரண்டு நண்பர்கள் தாம் செய்ய வேண்டியதைப் பற்றி மாறுபட்ட கருத்துடையவர்களாக இருந்தால், விட்டுக் கொடுக்கும் இயல்புள்ளவர் மற்றவரின் விருப்பத்திற்கேற்றவாறு தம்முடைய திட்டங்களை மாற்றிக் கொள்ள முயலுகின்றார்: ஆக்கிரமிக்கும் இயல்புள்ளவர் இவரைத் தம் திட்டத்தை மேற்கொள்ளும்படி செய்து விடுகின்றார். இரு வரும் பொருத்தப்பாடு அடையும் செயலில் இறங்கியுள்ளனர்.

இவ்வாறு தனியாளும் சூழ்நிலையும் இடையறாது இடைவினை இயற்றும் சேயலை அடியிற்காணும் வாய்பாடுகளால் உண்ர்த்தலாம்.

இவற்றில் ம என்பது மனிதனையும் உ என்பது உலகத்தையும் குறிக்கின்றன. முதலாவது: "மனிதன் உலகத்தைத் தாக்குகின்றான்; உலகம் திரும்ப மனிதனைத் தாக்குகின்றது" என்பதை உணர்த்துகின்றது. இரண்டாவது: "உலகம் மனிதனைத் தாக்குகின்றது; மனிதன் திரும்ப உலகத்தைத் தாக்குகின்றான்" என்பதை விளக்குகின்றது. கல்வி உளவியல் குழந்தையின் பட்டதிவு, செயல்கள் ஆகியவற்றைக் கொண்டு அவனைச் சூழ்நிலைக்கேற்றவாறு பொருத்தமுறச் செய்வதில் துணை நிற்கின்றது.

உளவியலால் ஆசிரியருக்குப் பயன்: உளவியலைக் கற்றல் ஆசிரியருக்கு எப்படி இன்றியமையாததாகின்றது? இதைச் சிறிது ஆராய்வோம். ஒரு காலத்தில் ஆசிரியர் கற்பிக்கும் பாடப் பொருளைமட்டிலும் நன்கு அறிந்தால் போதும் என்ற