பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

293


சோதனை: கூடிய வரையில் சமமான இரண்டு குழுக்கள் ஒரே வகுப்பிலிருந்து பொருக்கி எடுக்கப்பெற்றனர். ஒரு குழுவி லுள்ள ஒவ்வொருவரும் வயது, பால், இனம், பயிற்சி, அறிதிறன், சோதனை செய்யப்போகும் திறன் ஆகியவற்றில் ஒத்துள்ள மற்றொரு குழுவின் ஒவ்வொருவருடனும் பொருத்தப் பெற்றனர். ஒரு குறிப்பிட்ட திறன் முதலில் சோதிக்கப் பெற்றது; அதில் பயிற்சி அளித்து மீட்டும் அத்திறன் சோதிக்கப் பெற்றது. அடுத்த கட்டுப்பாட்டுக்குழு விற்குப் பயிற்சி அளிக்கப்பெறவில்லை. ஆனால், அக்குழு இறுதிச் சோதனைக்குட்படுத்தப் பெற்றது. வெற்றசைகளின்[1] நினைவுத்திறனிலிருந்து எண், எழுத்துகள், அல்லது சொற்களின் நினைவுத் திறனுக்கு ஏதாவது மாற்றம் ஏற்படுகின்றதா என்றும், பரப்பு எடைகள் பற்றிய துணிவு[2] மிகவிரிந்த அவற்றின் அளவுகளில் பயன்படுகின்றதா என்றும் ஒளி உறைப்புகளிலிருந்து[3] ஒலி உறைப்புகளுக்கு மாற்றம் ஏற்படுகின்றதா என்றும் கண்டறியப் பல சோதனைகளைச் செய்தனர். கிட்டத்தட்ட எல்லாச் சோதனைகளிலும் பயிற்சிபெற்றகுழு பயிற்சி பெறாத குழுவை விட சிறிதளவு மேம்பாடு[4] காட்டியது.

மேற்குறிப்பிட்ட சோதனையிலிருந்து நாம் சில உண்மை களை நினைவிலிருத்த வேண்டும்.

(1) பயிற்சி மாற்றம் என்பது பொறியியக்கம்போல் ஏற்படுவ தொன்றன்று. (எ-டு; செய்யுளை மனப்பாடம் செய்பவர் மளிகைக்கடைச் சாமான்களின் பட்டியலை நினைவுகூர்வt என்றோ, கட்டுரை எழுதுவதில் நேர்த்தியாக இருப்பவர் ஆடை யணிவதிலும் அங்கனம் இருப்பர் என்றோ எண்ணுதல் தவறு.

(2) பொருள்களிளொப்புமை இருப்பின் ஒருதுறையில் ஏற்பட்ட பயிற்சி இன்னொரு துறைக்குப் பயன்படும் முற்றிலும் மாறுபட்ட துறைகளாக இருப்பின், ஒன்றில் பெறும் பயிற்சி பிறிதொன்றுக்குப் பயன்படாது. (எ-டு; உதைப்பந்தாட்டத்தில்[5] பயிற்சி பெற்றவர் வளைத்தடிப் பக்தாட்டத்திலும்[6] திறமை காட்டக்கூடும். இவர் இரண்டாட்டமும் தெரியாதவரைவிட மிகத் திறமையாக விளையாடக்கூடும். தட்டச்சுப் பொறியினை இயக்கப் பழகியவர் ஹார்மோனியத்தைக் கையாளு வதை எளிதில் பழகுகின்றார். ஒரு பாடம் பயிற்சியின் முழுப்-

  1. வெற்றசை-Nonsense syllable.
  2. துணிவு-Judgement.
  3. உறைப்பு-Intensity.
  4. மேம்பாடு-Improvement.
  5. உதைப்பந்தாட்டம்-Football.
  6. வளைத்தடிப் பந்து-Hockey.