பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருத்து நிலவியது. ஆனால், சிறிது காலமாக அது மட்டிலும் போதாதென்று கருதப் பெறுகின்றது. பயில்விக்கும் மாணாக்கனையும் அறியவேண்டியது மிக இன்றியமையாதது என்று பல கல்வி வல்லுநர்கள் கூறி வருகின்றனர். 'ஆசிரியர் பரந்தாமனுக்குப் பைந்தமிழைப் பயில்வித்தார்' -இந்தச் சொற்றொடரில் பயில்வித்தல் என்ற வினை பரந்தாமனையும் தழுவி நிற்கின்றது; பைந்தமிழையும் தழுவி நிற்கின்றது காண்க. ஆசிரியர் பைந்தமிழையும் அறிந்திருத்தல் வேண்டும்; பரந் தாமனையும் அறிந்தவராய் இருத்தல் வேண்டும். பரந்தாமனை அறிதல்தான் உளவியல்; இந்த உளவியல், ஆசிரியருக்கு மிகவும் இன்றியமையாதது. பண்டைய ஆசிரியர் பைந்தமிழுக்கு அழுத்தம் தந்தனர்; இன்றைய ஆசிரியர் பரந்தாமனுக்கு அழுத்தம் தருகின்றனர். ஆகவே, ஸ்விட்ஸர்லாந்து நாட்டு உளவியலறிஞர் பெஸ்டலாஸில் என்பார் கல்விக்கலையை உளவியல் மயமாக்கு என்று கூறிப் போந்தார். எனவே, உளவியல், ஆசிரியருக்கு மிகவும் என்று இன்றியமையாதது என்பது பெறப்படுகின்றது. -

இந்த உளவியலறிவு ஆசிரியருக்கு எத்துனை அளவு பயன்கின்றது? மூன்று துறைகளில் இவ்வறிவு ஆசிரியருக்குப் பயன்படலாம்.

முதலாவது : தாம் கற்பிக்கும் மாணாக்கர்களை நன்கு அறிந்து கொள்ளுதல், பள்ளி, மாணாக்கர்களுக்கென்றே ஏற்பட்டுள்ளது; மாணாக்கர்களின் நலனுக்கென்றே ஆசிரியர் நியமிக்கப் பெற்றுள்ளார். மாணாக்கர்களை இரு முறைகளால் அறிந்துகொள்ளலாம். ஒன்று, அவர்களைத் தனியாள்களாக அறிதல்; இரண்டு, குழுவாக அறிதல். எந்த இரண்டு மாணாக்கர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு வரும் இணையற்ற தனியாள்ேே; இதுதான் அவருடைய தனி வீறு. ஆயினும், எந்த இரண்டு மாணாக்கர்களும் குருதியாலும் இனத்தாலும் தொடர்பில்லாதவராயிருப்பினும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவும் உள்ளனர். அவர்களுக்கு ஒரே வகையான புலனுறுப்புகளும் பிற உறுப்புகளும் உள்ளன; அவர்கள் ஒரு சில உளவியல் விதிகளின்படி வளர்ச்சியும் துலக்கமும் அடைகின்றனர். ஆசிரியர் தனிப்பட்ட மாணாக்கனை அறிதல் வேண்டும். குழுவாக அவர்களுக்குப் பயிற்றும் வாய்ப்பு இருப்-


35. பெஷ்டலாஷி-Pestalozzi.

36, தனியன்-Individuaí.

37. தனிவீறு -Individuality.