பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



302 கல்வி உளவியல் கோட்பாடுகள்

    அறிதிறனைப்பற்றிய புதிய கருத்து
  அறிதிறன் என்பது யாது? இவ்வினாவுக்கு உளவியலறிஞர் கள் ஒன்றுபட்ட கருத்தினைக் கூறுவதில்லை என்பதை மேலே கண்டோம். புதிர் நிலையில் அனுசரிக்கும் பொதுத்திறனே. அறிதிறனாகும் என்று பினே கருதினார். அதாவது தன்குறை காணல், தீர்மானம், அனுமானம், கற்றல், சிந்தனை, சொற் பயன், இசைத்திறன் ஆகியயாவும் ஒரு பொது வலிமை அல்லது ஆற்றல்களின் வெளிப்பாடுகள் என்று பினே கொண்டார். ஆயினும், பல ஒப்புத்தொடர்பு' இச்சோதனைகளால் உண்மை அவ்வளவு எளிதானதன்று என்பது தோன்றுகின்றது. அறிதிறன் என்னும் தலைப்பினுள் அடங்கும் சில பண்புகள் ஒன்றோடொன்று முற்றிலும் தொடர்பற்றவை. அஃதாவது, ஒருவர். ஒரு துறையில் மதிநுட்பத்துடனும் மற்றொன்றில் அஃதின்றியும் செயலாற்றலாம். இதிலிருந்து எல்லாத் திறன்களையும் அடக்கியாளும் பொது அறிதிறன் என ஒன்று இல்லை என்பது வெளிப்பனட
  ஸ்பியர்மெனின் கொள்கை: அறிதிறன் பொதுத்திறனே என்ற கருத்தினையும், ஒன்றோடொன்று தொடர்பற்ற சில திறன்களும் உளவென்பதையும் பொருத்தியமைக்கச் சிலர் முயன்றனர். அவர்களுள் ஸ்பியர்மென் என்ற ஆங்கில உளவியலார் முக்கியமானவர். இவருடைய கொள்கைப்படி, அறிதிறன் என்பது g என்ற பொதுத் திறனையும், Si, s. s, போன்ற பல தனித்திறன்களையும் கொண்டது. எந்தச் செயலும் சிறிது ஐ.யாலும் ஒன்றும் பலவுமானs-களாலும் இயலும், எடுத்துக்காட்டாக ஒவியம் வரைதலை நோக்கு வோம். இதில் ஒருவருடைய பொதுத் திறனும் சிறப்புத் திறனு மாகிய வரைதல்' என்பதும் சேர்ந்தே காணப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் பொதுத்திறன் ஒன்றே; அஃது ஒவ்வொரு வரிடமும் நிலையாக இருக்கும். ஆனால், மனிதருக்கு மனிதர் இப்பொதுத் திறன் மாறுபடும். பொதுத்திறனைத் தவிர, ஒவ்வொருவரிடமும் பல தனித் திறன்களும் உள்ளன. இசைத் திறன், கணிதத்திறன், ஏரணத்திறன்" (தருக்கத்திறன்), சொல் திறன், நினைவுத்திறன் ஆகியவை அவற்றுள் சில. எல்லா வற்றிலும் பொதுத்திறன் கலக்கும்; ஆயினும், இஃது ஒவ்வொன் றிலும் வேறுபடும். 

14. 91ʻil{AEGAErri—fflq-Correlation. 15. ஸ்பியர் மென்.Spearman, 16. atrawāśasār-Logical ability. . . .