பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

கல்வி உளவியல் கோட்பாடுகள்


ஆயினும், அறிதிறன் ஒரு தனி முழு அடக்கத்திறன் அன்று. அஃது ஒரு திறமைக் கோவையே என்பது மட்டிலும் அறியக்கிடக்கின்றது,

அறிதிறன் ஈவு நிலையானது

அறிதிறன் நிலையானது என்பதுபற்றிக் கடந்த சில யாண்டுகளாக மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அறிதிறன் ஈவு நிலை யானது என்றும், சிறந்த சோதனைகளால் அறுதியிடப்பெற்ற அறிதிறன் சோதனைகளின் முழுமை எய்தாக குறைவினால் சிறிதளவு மாறக்கூடியதென்றும், சூழ்நிலையில் ஏற்படும் மாற். றங்கள் ஒரு தனியாளின் அறிதிறனில் பிரதிபலிக்கக்கூடும் என்றும் பல்லாண்டுகளாகக் கருதப்பெற்று வந்தது. எடுத்துக்காட்டாக அக்கொள்கைப்படி 100 அ. ஈ. உடையவர் பயிற்சி வாய்ப்புகள், சூழ்நிலை மாற்றங்கள் போன்றவற்றால் 105 அ. ஈ. உடைய வராக மாறலாம்; அல்லது உடல் நோயாலோ மன அதிர்ச்சி யாலோ, வாய்ப்புக் குறைவாலோ 95 அ. ஈ. உடையவராகவும் ஆகலாம். சாதாரணமாக இதற்கு மேற்பட்ட மாறுபாடுகள் நிகழ்வதில்லை. ஆயினும், அண்மைக் காலத்தில் நாம் வியப் பெய்தக் கூடிய சில உண்மைகள் கண்டறியப்பெற்றுள்ளன. முற்பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 600 குழந்தைகட்குக் கொடுக்கப்பெற்ற சோதனைகளினால் அறிதிறன் ஈவு 20 வரை யிலும் ஏற்றம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அங்ங்ணமே, குறைமதியுடைய பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளை வளர்க்கும் விடுதிகளில் சேர்ந்து சில யாண்டுகட்குப் பிறகு சோதித்ததில் அவர்களுடைய சராசரி அ. ஈ. 116 ஆக இருப்பதையும் கண்டனர். இத்தகைய ஆராய்ச்சிகளினின்றும் அறிதிறன் ஈவு வசதியான சூழ்நிலைகளின் காரணமாகக் குறிப்பிடத்தக்க முறையில் மாறும் என்பது பெறப்படுகின்றது. ஆயினும், இச் சோதனைப்பற்றி உளவியலாரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் இருப்பதால், முடிவாக ஒன்றும் கூறுவதற்கில்லை.

அறிதிறன் 15, 16 யாண்டுகட்கு மேல் வளர்வதில்லை. அங்ஙனமே நமது உயரமும் ஓயாது வளர்ந்துகொண்டு போவ தில்லை. இக்காரணத்தாலேயே பல அறிதிறன் சோதனைகளில் 16.ஆம் யாண்டுக்கு மேல் வினாக்கள் கொடுக்கப்பெற, வில்லை. சாதாரணமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் அறி. திறனில் சிறந்த மாறுபாடுகள் இல்லை. ஆனால், குறிப்பிட்ட சில ஆண்கள் சில பெண்களைவிட அறிதிறன் மிக்கவராக இருக்கலாம்; அங்ஙனமே, சில பெண்களும் சில ஆண்களைவிட அதிக அறிதிறன் படைத்தவர்களாகவும் இருக்கலாம்.