பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும்

307



பொதுமக்களின் இத்தகைய பேச்சு பண்பாட்டு வேற்றுமையின் அடிப்படையில் எழுந்ததாகும். ஓரினம் தன்னுடைய கலை, இலக்கியம், அறிவியல், தொழில், சமயம், பழக்க வழக்கங்கள் வாழ்க்கைத்தரம் முதலியவை பிறிதோரினத்தின் கலை முதலிய வற்றைவிட உயர்ந்தவை எனக் கருதுகின்றது. ஆயினும், இனவேற்றுமையால் இயற்கை அறிதிறன் மாறுகின்றதா என்ற பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்பெறவில்லை. ஆனால், உளவியலார் இவ்வேற்றுமைகள் பெரும்பாலும் சூழ்நிலையால் தான் ஏற்பட வேண்டும் என்றும், சூழ்நிலையை ஒன்றுபடுத்தி னால் இவை நீங்கிவிடும் என்றும் கூறுகின்றனர்.இதில் திட்டமான ஆராய்ச்சியொன்றுமின்மையினால், இதைப்பற்றி உறுதியான முடிவு ஒன்றும் கூறுவதற்கில்லை.

பால்வேற்றுமையும் அறிதிறனும் : பண்டிருந்தே ஆண்கள் பெண்களைவிட அறிவில் சிறந்தவர்கள் என்ற தவறான கொள்கை எல்லா நாடுகளிலுமே நிலவுகின்றது. இதில் சிறிதும் உண்மை இருப்பதாகத் தோன்றவில்லை. அஃதாவது, பெரு வாரியான ஆண் பெண்களின் அறிதிறன் சவுகளைக் கண்டறிந்து ஒவ்வொரு பாலாருக்கும் சராசரி கண்டுபிடித்தால், அதிக வேறுபாடு இராது. ஆயினும், ஆண் மக்களிடையே பெண் மக்களிடையே இருப்பதைவிட அறிதிறன் மிக்குடையோர் அதிகமான எண்ணிக்கையிருப்பர்; அங்கனமே அறிதிறன் மிகக் குறைவுடையோரும் ஆண்பாலாரிடையே அதிகமாகக் காணப் படுகின்றனர். அறிதிறன் பற்றிய சோதனைகளால் அறிதிறன் வேற்றுமை அதிகமாக இல்லை என்று தெரிகின்றது. பொது வாகப் பெண்கள் மொழிபற்றிய சோதனைகளில் அதிகத் திறனையும் ஆண்கள் கணிதம், பொறிநுட்பம் பற்றிய சோதனைகளில் அதிகத் திறனையும் காட்டுகின்றனர்.

அறிதிறனும் உடல் கலனும் : மதி நுட்பம் மிக்கோர் உடல் நலம் குன்றியவர்களாக இருப்பர் என்பதுவும் உடல்வன்மை மிக்குள்ளோரிடம் அறிவு சற்றுக் குறைந்தே காணப்படும் என்பதுவும் பொதுமக்கள் கருத்து. இயற்கை ஒருவருக்கு அறிதிறனும், இன்னொருவருக்கு உடல்திறனும் அளித்து சமநிலையை நிலவச் செய்கின்றது என்று அவர்கள் கருத விரும்புகின்றனர். ஆராய்ச்சியின்மூலம் இக்கொள்கை தவறு டைத்து என்று கண்டறியப்பெற்றுள்ளது.

அறிதிறனும் ஊட்டமும் ஊட்டம்' எவ்வாறு அறிதிறனைப் பாதிக்கின்றது? இத்தொடர்பை ஆராயுங்கால் சோதனையில்

26. பண்பாடு.Culture.

27. ewl-l-ub-Nutrition.: